Author Topic: ~ 16 வகை தோசை! பனீர் தோசை ~  (Read 1128 times)

Offline MysteRy

Re: ~ 16 வகை தோசை! பனீர் தோசை ~
« Reply #15 on: February 23, 2016, 07:45:16 PM »
நெய் ரோஸ்ட்



தேவையானவை:
 பச்சரிசி & 3 கப், புழுங்கலரிசி & ஒரு கப், உளுத்தம்பருப்பு & முக்கால் கப், வெந்தயம் & ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, நெய் & தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 6 மணி நேரம் புளித்த பிறகு தோசை ஊற்றலாம். அடுப்பை மீடியமாக எரியவிட்டு, தோசைக்கல்லில் நல்ல சூடு ஏறியதும், நடுவில் மாவை ஊற்றி கை நடுக்காமல் தட்டை கரண்டியால் வட்டமாக பரப்பிக்கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். சுற்றிலும் சிறிது நெய்விட வேண்டும். திருப்பிப் போட வேண்டும். பிறகு மொறு மொறுப்பாக எடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள எந்த சட்னி ஆனாலும் சூப்பர்தான்