Author Topic: ~ முருங்கை பூ பொரியல் ~  (Read 343 times)

Offline MysteRy

~ முருங்கை பூ பொரியல் ~
« on: February 22, 2016, 10:08:52 PM »
முருங்கை பூ பொரியல்



தேவையான பொருட்கள் :

முருங்கை பூ – 2 கப் (250 கிராம்)
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்
உப்பு – சுவைக்கு

தாளிக்க :

கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* வேர்க்கடலையை பொடித்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை கொட்டி வதக்குங்கள்.
* அதோடு முருங்கை பூ சேர்த்து கிளறவும்.
* பின்பு தேங்காய் துருவல், பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
* இதை சாதத்துடன் சாப்பிடலாம். சாப்பாத்திக்கு கூட்டாக பயன்படுத்தலாம்.
« Last Edit: February 22, 2016, 10:13:10 PM by MysteRy »