Ithu just fun thaan yaarum feel pani kopapadathinga nan entha oru nadikarukkum fan ilaingo
இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்..
எங்க டாக்குடரு விஜயை பாத்தா
உங்க எல்லாருக்கும் " கைப்புள்ள "
கணக்கா தெரியுதா..?
ஆனா, ஊனா அவர் நடிக்கிற படத்தை..
( சரி., சரி... இருக்குற படத்தை.. )
கிண்டல் பண்றீங்க..?!!
இப்ப லேட்டஸ்ட்டா வேற
வேலாயுதம் படமும், 7-ஆம் அறிவு
படமும் ஒரே கதை தான்னு
சில பேர் கதை கட்டி விடறாங்க..
இதையெல்லாம் கேக்கும் போது
எனக்கு செம டென்ஷன் ஆகுது..
பின்ன தெலுங்கு, மலையாளம்,
இந்தி, ஹாலிவுட், அசஸின்கிரீட்-னு
அவர் ரேஞ்ச் எங்கேயோ போயிட்டு
இருக்கு போது..
இந்த மாதிரி ஒரு தமிழ்படத்தை.,
( அதுவும் வேற ஒருத்தர் நடிச்ச படத்தை )
காப்பி அடிச்சார்னு சொல்றது
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு..
இந்த 10 வித்தியாசங்களை படிங்க..
அப்ப புரியும் " வேலாயுதம் " எவ்ளோ
வித்தியாசமானவன்னு...
ஏழாம் அறிவு
1. வில்லன் சீனால இருந்து கிளம்பி வருவான்..
வேலாயுதம்
1.வில்லன் ஆப்கான்ல இருந்து கிளம்பி வருவான்..
ஏழாம் அறிவு
2. Bio Weapon Use பண்ணி மக்களை கொல்லுவாங்க.
வேலாயுதம்
2. குண்டு வெச்சி மக்களை கொல்லுவாங்க.
ஏழாம் அறிவு
3. முதல்ல சென்னைலதான் ஆரம்பிப்பாங்க..
வேலாயுதம்
3. இங்கேயும் சென்னை தான்.. ஆனா ஏரியா வேற
ஏழாம் அறிவு
4. இதுல ஹீரோ சர்க்கஸ்காரர்
வேலாயுதம்
4. இதுல ஹீரோ பால்காரர்
ஏழாம் அறிவு
5. இதுல ஸ்ருதி ஒரு Scientist.
வேலாயுதம்
5. இதுல ஜெனி ஒரு Reporter.
ஏழாம் அறிவு
6. ஸ்ருதிதான் சூர்யாவுக்கு ' போதிதர்மர் ' யார்னு புரிய வெப்பாங்க.
வேலாயுதம்
6. ஜெனிதான் விஜய்க்கு ' வேலாயுதம் ' யார்னு புரிய வெப்பாங்க.
ஏழாம் அறிவு
7. Senior Scientist ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு
வேலாயுதம்
7. உள்துறை மந்திரி லஞ்சம் வாங்கிட்டு இந்தியா அழிக்க உதவி பண்ணுவாரு.
ஏழாம் அறிவு
8.லஞ்சம் 300 கோடி
வேலாயுதம்
8. லஞ்சம் 5000 கோடி
ஏழாம் அறிவ
9. சூர்யா ஒரு சீன்ல ஸ்ருதியை யானை மேல கூட்டிட்டு போவாரு
வேலாயுதம்
9.விஜய் ஒரு சீன்ல ஜெனியை குதிரை மேல கூட்டிட்டு போவாரு
ஏழாம் அறிவு
10.கடைசி Fight-ல சூர்யா சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு..
வேலாயுதம்
10.கடைசி Fight-ல விஜய் சட்டையையே கழட்டிட்டு சண்டை போடுவாரு..
இப்ப சொல்லுங்க.. இது ரெண்டும்
ஒரே கதையா..?!!!
( என்னாது கொஞ்சம் அப்படி தான்
தெரியுதா..? )
சரி இருங்க... நான் முக்கியமான
ஒரு வித்யாசம் சொல்றேன்..
வேலாயுதம் படத்துல விஜய்க்கு
மாமா பொண்ணு இருக்காங்க..
7-ஆம் அறிவுல சூர்யாவுக்கு
மாமா பொண்ணு இருக்காங்களா..?!
இருக்காங்களா..?! இருக்காங்களா..?!
எப்பூடி..?!!