Author Topic: ~ பிரட் புட்டு ~  (Read 347 times)

Online MysteRy

~ பிரட் புட்டு ~
« on: February 19, 2016, 08:57:51 PM »
பிரட் புட்டு



தேவையான பொருட்கள்:

இனிப்பு பிரட் – ஒன்று
வெல்லம் – கால் கிலோ
ஏலக்காய் – 2
வறுத்த முந்திரி – 10
தேங்காய் – அரை மூடி

செய்முறை:

பிரட்டில் உள்ள ஒரங்களை எடுத்து விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
இதை அகலமான கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதம் வந்ததும் ஏலப்பொடியை போட்டு இறக்கவும்.
அதை பிரட்டில் சிறிது, சிறிதாக ஊற்றி கிளறவும்.
அதனுடன் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும்.