Author Topic: ~ செட்டிநாடு எலும்பு குழம்பு ~  (Read 312 times)

Offline MysteRy

செட்டிநாடு எலும்பு குழம்பு



ஆட்டிறைச்சி எலும்பு – 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
உப்பு மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
நீர் – 1 கப்
தக்காளி கிரேவிக்கு
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 கப் துருவியது
தக்காளி – 3
உருளைக்கிழங்கு – 2
முருங்கைக்காய் – 1
கொத்தமல்லி சில இலைகள்

தாளிக்க

எண்ணெய் – 1/4 கப்
பட்டை- 3 துண்டு
பெருஞ்சீரகம் விதைகள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 5
கிராம்பு- 5
வாசனை இலைகள்

எப்படி செய்வது?

எலும்பு வேகவைக்க
சுத்தம் செய்து வைத்துள்ள எலும்புடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கப்பட்ட 1 பெரிய வெங்காயம், மஞ்சள், உப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் கலந்து குக்கரில் மூடி வைத்து வேகவிடவும். பின்னர் துருவிய தேங்காயை மையாக அரைத்து வைக்கவும்..
தக்காளி கிரேவிக்கு
கடாயை அடுப்பில் வைத்து பட்டை, வாசனை இலை, கருவேப்பிலை, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து கிளறியதும் பச்சை மிளகாய், வெங்காயம், சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி தக்காளி சேர்த்து கிளறி ஒரு விசில் வரும் வரை மூடி வைத்துவிடவும். கிரேவி பதத்திற்கு வந்ததும் வத்தல் பொடி, மல்லி தூள் சேர்த்து கிளறி அதனுடன் கரம் மசாலாவையும் சேர்க்கவும்.
பின்னர் முருங்கைகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தக்காளி கிரேவியுடன் கலந்து அரைத்து வைத்துள்ள தேங்காய், வேகவைத்த எலும்பு கலவையும் சேர்த்து கிளறி 25 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு எலும்பு குழம்பு ரெடி.