Author Topic: ~ குடல் குழம்பு ~  (Read 307 times)

Online MysteRy

~ குடல் குழம்பு ~
« on: February 19, 2016, 08:01:38 PM »
குடல் குழம்பு



குடல்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 4
பூண்டு – 8 பல்
இஞ்சி – அரை இன்ச் அளவு
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி
தேங்காய் – அரை மூடி
புளி – பாக்களவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பட்டை – ஒன்று
கிராம்பு – ஒன்று
இலை – சிறிது
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது

குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம். சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில் போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன் இறக்கவும்