Author Topic: ~ மசாலா பால் ~  (Read 380 times)

Online MysteRy

~ மசாலா பால் ~
« on: February 17, 2016, 10:02:55 PM »
மசாலா பால்



தேவையான பொருட்கள்:

பால் – 2 கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய் – 1 (தட்டிக் கொள்ளவும்)
பாதாம் – 4
பிஸ்தா – 6
குங்குமப்பூ – சிறிது

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும்.
பின்பு அதில் குங்குமப்பூ பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான மசாலா பால் ரெடி!!!