Author Topic: ~ பனம் பழ பணியாரம் ~  (Read 565 times)

Online MysteRy

~ பனம் பழ பணியாரம் ~
« on: February 15, 2016, 08:53:13 PM »
பனம் பழ பணியாரம்



தேவையானவை:

பழுத்த பனம்பழம் – ஒன்று
கெட்டித் தேங்காய்ப்பால் – ஒரு கப்
வறுத்த அரிசிமாவு – 1 கப்
எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

பனம்பழத்தில் தோலை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நார்ப்பகுதியை நன்கு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
இந்த சாறுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை, அரிசிமாவு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து காய்ந்தவுடன், குழிகளில் நெய் ஊற்றி, பிறகு கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.