Author Topic: ~ வெண்டைக்காய் சாம்பார் ~  (Read 497 times)

Offline MysteRy

வெண்டைக்காய் சாம்பார்



தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு: 1 ½ கப் வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
வெண்டைக்காய்: 100 கிராம், 1 இன்ச் நிளமாக நறுக்கவும்
சாம்பார் வெங்காயம்: 8-12 தோல் உரித்தது
தக்காளி: 4 சிறிதாக நறுக்கியது
பச்சை மிளகாய் : 2 கீறிக்கொள்ளவும்
புளி : சிறிய நெல்லி அளவு
சாம்பார் தூள் : 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப்
தாளிக்க தேவையானவை
எண்ணெய்/நெய் : 1 மேசைக்கரண்டி
கடுகு : 2 தேக்கரண்டி
வெந்தயம்: 1 தேக்கரண்டி
சிரகம் :2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
கறிவேப்பிலை: 1 கொத்து
மல்லியிலை: 1 பிடி சிறிதாக நறுக்கியது

செய்முறை:

: குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சிரகம், பெருங்காயத்தூள், சேர்த்து பொறியவிடவும், பின்னர் சாம்பார் வெங்காயம், நறுக்கிய
வெண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும், வதங்கியதும் புளியுடன், உப்பு , மஞ்சள் தூள், சாம்பார் தூள் தண்ணீர் சேர்த்து கரைத்து காயில் ஊற்றி வேகவைத்த பருப்பை சேர்க்கவும் நன்கு கொதி வந்ததும் – (அதாவது பச்சை வாசம்போகும் வரை) பின்னர் மல்லி தழை தூவிடவும்.