Author Topic: 2012ன் கிரகப் பெயர்ச்சிகள்  (Read 1611 times)

Offline RemO

கிரகப் பெயர்ச்சியினால் குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படுகிறது. குரு, ராகு, கேது பெயர்ச்சிகளின் போது அதற்காக சிறப்பு பூஜைகளும், வழிப்பாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.

2012ம் ஆண்டு நிகழும் கிரகப் பெயர்ச்சிகள்:

குருபெயர்ச்சி:

நந்தன வருஷம் வைகாசி மாதம் 4ம் தேதி (17-05- 2012) வியாழக்கிழமை குருபகவான் 3.01 நாழிகைக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி:

நந்தன வருஷம் கார்த்திகை மாதம் 17ம் தேதி (02-12-2012) ஞாயிறுக்கிழமை ராகு பகவான் 11.31 நாழிகைக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கின்றனர்.

அக்னி நட்சத்திரம்:

நந்தன வருஷம் சித்திரை மாதம் 22ம் தேதி (04-05-2012) வெள்ளிக்கிழமை 2.33 நாழிகைக்கு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து, வைகாசி மாதம் 15ம் தேதி (28-05-2012)
திங்கட்கிழமை 20.16 நாழிகைக்கு நிவர்த்தி அடைகின்றது.