Author Topic: ~ அரைக்கீரை வடை ~  (Read 342 times)

Offline MysteRy

~ அரைக்கீரை வடை ~
« on: February 13, 2016, 09:17:10 PM »
அரைக்கீரை வடை



தேவையான பொருட்கள்:

அரைக்கீரை – ஒரு கப்
உளுந்து + கடலைப் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவைக்கு

செய்முறை :

பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, ஒன்றிரண்டாக நீர் விடாமல் அரைக்கவும்.
அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரையை சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வடைகளாக தட்டி வைக்கவும்.எண்ணெயை சூடாக்கி, தட்டிய வடைகளைப் பொரித்து எடுக்கவும்.சுவையான அரைக்கீரை வடை தயார்.