Author Topic: ~ கத்தரிக்காய் காரக்குழம்பு ~  (Read 365 times)

Offline MysteRy

கத்தரிக்காய் காரக்குழம்பு



தேவையானவை :

கத்தரிக்காய் – 250 கிராம்
புளி – கைப்பிடி அளவு
மிளகாய் தூள் + தனியா தூள் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – அரைத் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – அரை கப்
தக்காளி – கால் கப்
பூண்டு பல் – சிறிதளவு
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு

செய்முறை :

1.முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளதை ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
2.பின்பு பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு தக்காளி சேர்த்துவதக்கவும். கத்தரிக்காயைஅரிந்து சேர்த்து வதக்க வேண்டும். சாம்பார் பொடி சேர்த்து ஒரு முறை பிரட்டி புளி தண்ணீர் சேர்க்க வேண்டும்.
3.அரைக்க வேண்டியதை அரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்ற வேண்டும். கடைசியாக உப்பு மற்றும் அரை தேக்கரண்டி வெந்தயத்தை பொடி செய்து குழம்பில் கொட்டி கொதிக்க விட வேண்டும்.