Author Topic: ~ புடலங்காய் பொரியல் ~  (Read 304 times)

Offline MysteRy

~ புடலங்காய் பொரியல் ~
« on: February 13, 2016, 08:50:10 PM »
புடலங்காய் பொரியல்



தேவையானவை :

புடலங்காய் – 1
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
தேங்காய் – கால் மூடி
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

1.முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கி விதைகளை நீக்கி நறுக்கவும் .
2.பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு இரண்டு மிளகாய்,, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவற்றைப் போட்டுத் தாளிக்க வேண்டும்.
3.அடுத்ததாக புடலங்காயைப் போட்டு புரட்டிவிட வேண்டும். காய் வெந்ததும், துருவிய தேங்காயைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து இறக்கவும்.