Author Topic: ~ நண்டு கிரேவி ~  (Read 315 times)

Offline MysteRy

~ நண்டு கிரேவி ~
« on: February 11, 2016, 06:57:38 PM »
நண்டு கிரேவி



தேவையான பொருட்கள் :

நண்டு – 1 கி
தேங்காய் – 1 மூடி (பெரியது )
இஞ்சி – 1 துண்டு
பூண்டு -20 பல்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 1
தக்காளி – 2
சோம்பு – 2 ஸ்பூன்
மிளகு – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – 2 கொத்து
மல்லித்தழை – சிறிது

செய்முறை:

சோம்பு பொடித்து வைக்கவும்
பின் மிளகை வெற்று வாணலில் மணம் வருமாறு வறுத்து பொடி செய்து தனியே வைக்கவும் .
இஞ்சி ,பூண்டு விழுது தயார் செய்து வைக்கவும் .
தேங்காய் பால் தயாரித்து வைக்கவும் (வடிக்கட்ட வேண்டாம் )
பெரிய வெங்காயம் ,தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும் .
தேங்காய் பாலில் ,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,இவற்றை போடவும் .அதில் சுத்தம் செய்த உடனே நண்டையும் இந்த கலவையில் போட்டு வைக்கவும் .
பெரிய பாத்திரத்தில் (நண்டு வேக தேவையான பாத்திரம் )எண்ணெய் விட்டு ,அதில் சோம்புத்தூள் ,பெரிய வெங்காயம் ,கருவேப்பிலை , பச்சைமிளகாய் ,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பின் அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் நண்டு மசாலாவையும் சேர்த்து ,கிளறி உப்பு,கரம்மசாலாத்தூள் சேர்த்துகிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வேகவிடவும்
கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறலாம்