Author Topic: ~ சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா ~  (Read 326 times)

Offline MysteRy

சன்டே ஸ்பெஷல்!!! இறால் மசாலா



தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ வெங்காயம் – 2 (நறுக்கியது) இஞ்ச பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/4 டீஸ்பூன் கசகசா – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும். பின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும். இப்போது சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.