Author Topic: ~ மஷ்ரூம் பிரைட் ரைஸ் ~  (Read 343 times)

Online MysteRy

~ மஷ்ரூம் பிரைட் ரைஸ் ~
« on: February 07, 2016, 08:54:01 AM »
மஷ்ரூம் பிரைட் ரைஸ்



தேவையானவை :

பஸ்மதி அரிசி : 2 கப்
மஷ்ரூம் : 250 கிராம்
வெங்காயம் : 1
வெங்காய தாள் : 1
பூண்டு : 5 பல்
கேரட் துருவல் : ¼ கப்
குடை மிளகாய் : 1 சிறியது
மிளகுத்தூள் : 2 டீஸ்பூன்
சோயாசாஸ் : 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

 முதலில் மஷ்ரூம், வெங்காயம், வெங்காயத்தாள், குடை மிளகாய் போன்றவையை தேவையான வடிவில் வெட்டி வைத்துக்கொள்ளவும்
· பூண்டு தோலோடு நன்றாக மையா நசுக்கி வைத்துக்கொள்ளவும்
· பஸ்மதி அரிசியை பதமாக வடித்து வைக்கவும்.. மலர வேக விட வேண்டாம்… அரிசி கொதிக்கும் பொது ஒரு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.. அப்போ தான் வடித்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்
· வாணலில் எண்ணெய் காய்ந்ததும் நசுக்கிய பூண்டு சேர்த்து சிவக்க வைக்கவும் அதில் மஷ்ரூம் சேர்த்து வதக்குங்க… கூடவே மிளகுத்தூள் உப்பு சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி வைக்கவும்.
· திரும்பவும் வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், வெங்காயத்தாள், கேரட், குடைமிளகாய் சேர்த்து அதிகமான தீயில் வதக்கவும் அரை பதத்திற்கு வதங்கினால் போதும்.. அந்த பதத்தில் மிளகுத்தூள், உப்பு, சோயாசாஸ், சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதில் வதக்கி வைத்த மஷ்ரூம் சேர்க்கவும்..
· இப்போது தீயை குறைத்து பஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கிளறவும்… நன்கு கலந்தும் தீயை அதிகமாகி கடைசியாக ஒரு பிரட்டு பிரட்டி இரக்கவும்