Author Topic: என்னுள் நீ!!!  (Read 978 times)

Offline Anu

என்னுள் நீ!!!
« on: February 29, 2012, 12:57:17 PM »
மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!

*

 உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!

*

இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

*

ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என்னுள் நீ!!!
« Reply #1 on: February 29, 2012, 07:11:35 PM »
உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!

rombaaaaaaaa super lines anuma unmaiyana varigal koda ithu

இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

kaarirul suzhtha idathil kuda paravum kaathal velicham nala varigal anuma

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Anu

Re: என்னுள் நீ!!!
« Reply #2 on: March 01, 2012, 07:22:40 AM »
idhai ezhudinavangaluku poyi seratum unga paaraatukal :).
idhu sutta kavidhai ma. neku rasika thaan theriyum.

Offline thamilan

Re: என்னுள் நீ!!!
« Reply #3 on: March 01, 2012, 07:47:51 AM »
அனு
இந்த கவிதையை நானும் வாசித்து இருக்கிறேன். கவிதையை வாசித்ததும் எங்க அனு கூட கவிதைகளை சுட்டு போடுறாங்களே என்று மனதுக்குள் ஒரு சின்ன வருத்தம். தரிசினிக்கு சொன்ன பதிலில் அது நீங்க வாசிச்சி ரசிச்ச கவிதை என்று சொல்லி என் மனதில் பால் வார்த்துட்டீங்க. நன்றி அனு.
அனு, கவிதை எழுதுவது அத்தனை பெரிய விசயம் இல்ல. நீங்க பார்க்கிறது. பேசுறது. எல்லாமே கவிதைகளா மாறும். உங்க நடையில உங்க மனதுக்கு பட்டத எழுதுங்க. அது தான் கவிதை.
உங்களுக்கு உதவி பண்ண நாங்கள் எப்போதும் தயார். எங்களுக்கு அனுவும் சொந்தமா கவிதை எழுதனும்.

Offline Anu

Re: என்னுள் நீ!!!
« Reply #4 on: March 01, 2012, 08:24:52 AM »
அனு
இந்த கவிதையை நானும் வாசித்து இருக்கிறேன். கவிதையை வாசித்ததும் எங்க அனு கூட கவிதைகளை சுட்டு போடுறாங்களே என்று மனதுக்குள் ஒரு சின்ன வருத்தம். தரிசினிக்கு சொன்ன பதிலில் அது நீங்க வாசிச்சி ரசிச்ச கவிதை என்று சொல்லி என் மனதில் பால் வார்த்துட்டீங்க. நன்றி அனு.
அனு, கவிதை எழுதுவது அத்தனை பெரிய விசயம் இல்ல. நீங்க பார்க்கிறது. பேசுறது. எல்லாமே கவிதைகளா மாறும். உங்க நடையில உங்க மனதுக்கு பட்டத எழுதுங்க. அது தான் கவிதை.
உங்களுக்கு உதவி பண்ண நாங்கள் எப்போதும் தயார். எங்களுக்கு அனுவும் சொந்தமா கவிதை எழுதனும்.

udhavi thevai patta kandippa ketkiren thamizhan.
 (F) :)

Offline ooviya

Re: என்னுள் நீ!!!
« Reply #5 on: March 02, 2012, 02:38:08 AM »
தமிழன் CBI சுட்டா தெரிந்து விடும்
இவரிடம் இருந்து யாரும் தப்ப முடியாது
ஹஹஹா
கண்களே ஆண்களை நம்பாதே