Author Topic: ~ பட்டாணி மசாலா ~  (Read 446 times)

Offline MysteRy

~ பட்டாணி மசாலா ~
« on: January 30, 2016, 05:52:06 PM »
பட்டாணி மசாலா



சின்ன உருளைக்கிழங்கு 15
பச்சை பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்

அரைக்க:

பாதாம் பருப்பு 5
முந்திரிபருப்பு 5
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு

எப்படிச் செய்வது?

சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாதாம்பருப்பு, முந்திரிபருப்பு,கசகசா மூன்றையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பட்டையையும் பொட்டுக்கடலையைம் வறுத்து ஊறவைத்த பருப்புகள்,கசகசா எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணய் சேர்த்து உருகினவுடன் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் பட்டாணி,உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.