Author Topic: ~ இறால் கிச்சடி ~  (Read 338 times)

Offline MysteRy

~ இறால் கிச்சடி ~
« on: January 28, 2016, 09:09:48 PM »
இறால் கிச்சடி



தேவையான பொருட்கள்:

இறால் –1/4கிலோ
பெரிய வெங்காயம் –3
பச்சை மிளகாய் –5
இஞ்சி –1
பூண்டு –6
கொத்துமல்லித் தழை –சிறதளவு
காரத்தூள் –2டாஸ்பூன்
கரம் மசாலாத் தூள் –1/2டாஸ்பூன்
கிராம்பு –2
பட்டை –1துண்டு
ஏலக்காய் –2
பால் –1/2கப்
நெய் –50கிராம்

செய்முறை :

1.முதலில் பாத்திரத்தில் இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டாஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
2.பின்பு கரம்மசாலாத்தூள்,இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை நீள, நீளமாக நறுக்கவும்.
3.ஒரு கடாயில் நெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வாசனை வருகையில் வெங்காயம் கரம் மசாலத்தூள் சேர்த்து வதக்கவும்.
4.வெங்காயம் வதங்கியதும், இறால் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.
5.பிறகு இறால் பொன்னிறமாக வதங்கியதும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இறால் கிச்சடி தயார்.