Author Topic: பால் நிலவு II  (Read 782 times)

Offline SweeTie

பால் நிலவு II
« on: January 29, 2016, 01:44:38 AM »
மாலையும் இரவும் 
சந்திக்கும் வேளை
காதலர்  கைகோர்த்து
இணையும் நேரம்
பறவைகள் அடைக்கலம்
தேடிடும் காலம்
அன்னை குழந்தைக்கு
உணவூட்டும் நிமிடம்
அனைவரும் என்னை
எதிர்பார்க்கும் தருணம்
மெல்லிய துகில் கொண்டு
மூடிய பெண்போல்
பாலில் குளித்து
பளிச் என்று தெரிய
கார் முகில் விலக்கி
காட்சி கொடுத்தேன்
பால்நிலவானேன் ....
« Last Edit: January 29, 2016, 05:40:41 AM by SweeTie »

Offline Maran

Re: பால் நிலவு II
« Reply #1 on: January 29, 2016, 01:26:25 PM »


அழகான வரிகள் தோழி.... சற்றே பால் நிலவாய் மாறிட்டீங்க போல...
சிந்தித்துப் பார்த்தால் நிலவு பெண் பாலகத்தான் இருக்கவேண்டும் என் எண்ணம்.



நிலவு காய்வாதாலோ என்னவோ?
பால் சூடேற்றும் அடுப்பு போல்,
கருமை பூசிக் கொள்ளும் வானம்!




வானம்
தன்னிடம்
நிலவு
உள்ளது
என்று கூறி
கர்வம் கொண்டது,

பூமி
அவளை
காட்டியது
அதனிடம்,
சுருங்கிப்போனது
வானம்...!!!




Offline SweeTie

Re: பால் நிலவு II
« Reply #2 on: January 29, 2016, 07:40:51 PM »

மாறன் அழகோ அழகு உங்கள் பதில் அழகு. 
நன்றி.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பால் நிலவு II
« Reply #3 on: January 30, 2016, 11:38:08 AM »
எண்ணம் எழில் !!
எண்ணம் சார் பார்வை பொழில் !!
அதை வெளிப்படுத்த வரைந்த வரிகள் வனப்பு !!
வரைந்திட வழிவழங்கிய சிந்தை சுந்தரம்  !!

Offline Maran

Re: பால் நிலவு II
« Reply #4 on: January 30, 2016, 02:50:03 PM »


நன்றி தோழி...  :)  :)

இத்தளத்தில் கவிதாயினிகளுக்கு இருக்கக் கூடிய ஈர்ப்பு கவிஞர்களுக்கு இருப்பதில்லை என்பதே இங்கு உண்மை. பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும் என்பதால் உங்கள் கவி இழையின் மறுமொழியில் கிறுக்கல்களையும் பதிவிட்டுள்ளேன்.  :)  :)   :)



« Last Edit: January 30, 2016, 06:45:45 PM by Maran »

Offline பொய்கை

Re: பால் நிலவு II
« Reply #5 on: January 31, 2016, 12:10:52 AM »
ஒரு நிலவு ., ஒரு நிலவுக்கு கவிதை எழுதினால் இப்படி தான் இருக்குமோ?
ஒருவர் தூரத்தில் இருக்கும் நிலவை தண்ணீரில் கொண்டு வந்து அள்ளி எடுக்கிறார்.
நீங்கள் காதலர் இணையும் நேரம் கார்முஹில்  விலக்கி காட்சி கொடுக்கும் நிலவு.,,என்கிறீர்கள்..  அருமை.!
உங்கள் வரிகளின் விழிகள் கொண்டு நிலவை ரசிப்பது அருமையாகத்தான் இருக்கிறது.

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: பால் நிலவு II
« Reply #6 on: January 31, 2016, 01:58:50 AM »
nice line sweetie...

Offline JoKe GuY

Re: பால் நிலவு II
« Reply #7 on: January 31, 2016, 08:44:49 AM »
ஸ்வீடி நீங்கள் கவிஞர் என்பதில் மாற்று கருத்து கிடையாது.அருமை. மாறன் நண்பரே  கருத்து கவிதையில் கூறியது அருமை .வளரட்டும் உங்களின் தமிழ் கவிதைகள்.[/size]
« Last Edit: January 31, 2016, 08:50:00 AM by JoKe GuY »
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: பால் நிலவு II
« Reply #8 on: February 01, 2016, 08:34:27 AM »
அழகு தமிழில்  அன்புடன் பாராட்டிய  தோழர்கள்  அசைஅஜித்   மாறன்,  பொய்கை,   ராம் ,  ஜோக்  கை   அனைவருக்கும்  நன்றிகள் 

« Last Edit: February 01, 2016, 08:36:10 AM by SweeTie »