Author Topic: ~ தூதுவளை துவையல் ~  (Read 375 times)

Offline MysteRy

~ தூதுவளை துவையல் ~
« on: January 25, 2016, 08:56:34 PM »
தூதுவளை துவையல்



தேவையான பொருட்கள்:

தூதுவளை மூலிகை- ஒரு கப்,
சிறிய வெங்காயம்- 2
மிளகாய் வத்தல்- 3,
புளி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் தூதுவளை கீரையை நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
அதில் கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் வதக்கிய கீரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும்.
அவற்றில் மிளகாய் வத்தல், உப்பு, புளி, சிறிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
தூதுவளை மூலிகையை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், இதுபோன்று துவையலாக செய்து உண்டு மகிழலாம்.