Author Topic: ~ கீரை – சீஸ் சாண்ட்விச் ~  (Read 371 times)

Offline MysteRy

கீரை – சீஸ் சாண்ட்விச்



தேவையான பொருட்கள்:

 பசலை கீரை – 1 கட்டு
கோதுமை பிரட் துண்டுகள் – 6
பூண்டு – 2
மிளகு தூள் – 1 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
சர்க்கரை – கால் ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
சீஸ் – தேவையான அளவு

செய்முறை:

• ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு அதில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு எடுத்து கொள்ளவும்.
• பசலை கீரையை மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
• சீஸை துருவிக் கொள்ளவும்.
• பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டை போட்டு தாளித்த பின் பசலை கீரையை போட்டு கிளறவும்.
• அதில் உப்பு, சர்க்கரை, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். ஆனால் கீரை பாதி அளவு வெந்தால் போதுமானது.
• பாதி வெந்த கீரையை ஒரு கிண்ணத்தில் போட்டு ஆறியவுடன் அதில் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
• பிரட் துண்டின் ஓரங்களை வெட்டி விடவும்.
• ஒரு பிரட் துண்டை வைத்து அதன் மேல் கீரையை போட்டு அதன் மேல் துருவிய சீஸை போட்டு மேலே மற்றொரு பிரட் துண்டால் மூடி விடவும். இவ்வாறு அனைத்து பிரட் துண்டுகளிலும் செய்யவும்.
• இந்த பிரட் துண்டுகளை பிரட் டோஸ்ட்டரில் வைத்து (Grill ) கிரில் செய்யவும். பின்னர் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.