Author Topic: ~ பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவை நிறுத்தம்: மைக்ரோசாப்ட் முடிவு! ~  (Read 1427 times)

Online MysteRy

பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவை நிறுத்தம்: மைக்ரோசாப்ட் முடிவு!



கலிபோர்னியா: 13-01-2016 முதல் பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவையை நிறுத்தப்படுகிறது. எனவே, அவற்றை அப்டேட் செய்து கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8, 9, 10 ஆகியவற்றின் சேவைகளை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த எக்ஸ்ப்ளோரர்களை உபயோகிப்பவர்களுக்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வசதிகள் இன்று (13-ம் தேதி) முதல் நிறுத்தப்பட்டுள்ளது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

எனவே, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக தற்போதைய எக்ஸ்ப்ளோரரான 11-க்கு அப்டே; செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாமல், பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.