Author Topic: ~ பொள்ள வடை ~  (Read 448 times)

Offline MysteRy

~ பொள்ள வடை ~
« on: January 19, 2016, 09:59:38 PM »
பொள்ள வடை



பச்சரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – 1/4 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 5,
பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளவும். அதை சலித்து வைத்துக் கொள்ளவும். பருப்பையும் நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை அகண்ட பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி சிறிதளவு மாவை எடுத்து எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலையில் வட்டமாக தட்டை போல் தட்டி (மிக மெல்லியதாகவும், தடிமனாகவும் இல்லாமல்) எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொள்ள வடையை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Offline Nick Siva

Re: ~ பொள்ள வடை ~
« Reply #1 on: January 19, 2016, 10:02:33 PM »
enaku naalu vadai parcel mystery 8) 8)

Offline MysteRy

Re: ~ பொள்ள வடை ~
« Reply #2 on: January 19, 2016, 10:14:33 PM »