« on: January 19, 2016, 09:36:52 PM »
சேனை அரைச்சுக்கலக்கி
தேவையான பொருட்கள்
சேனைத்துண்டுகள் – 1/2 கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சைமிளகாய் – 2,
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
புளிக்காத தயிர் – 1/2 கப்,
உப்பு தேவைக்கு.
தாளிக்க…
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை சிறிது.
எப்படிச் செய்வது?
சேனையை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி பின் அதை நன்றாக கழுவவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். சேனையுடன் இஞ்சி, பச்சைமிளகாய், புளி, உப்பு இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இக்கலவையில் தயிரைக் கடைந்து சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைச்சுக்கலக்கியில் கொட்டவும். இதை சாதத்துடன் பரிமாறலாம்.
« Last Edit: January 19, 2016, 09:41:17 PM by MysteRy »

Logged