Author Topic: ~ நொய்யரிசி – புளிப்பொங்கல் ~  (Read 308 times)

Offline MysteRy

நொய்யரிசி – புளிப்பொங்கல்



தேவையான பொருட்கள்:

நொய்யரிசி – 1 கப்
மிளகாய் வற்றல் – 5
புளி – எலுமிச்சை பழ அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், நெய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு

செய்முறை:

* புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
* பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்ததும் நொய்யரிசியை பேட்டு நன்றாக கிளறவும்.
* வெந்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பை இளம் தீயில் வைக்கவும்.
* புளிக்கரைசல் வாசனை போய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
* புளிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.