Author Topic: ~ லேயர் மீன் பிரியாணி ~  (Read 331 times)

Online MysteRy

~ லேயர் மீன் பிரியாணி ~
« on: January 14, 2016, 11:07:45 PM »
லேயர் மீன் பிரியாணி



தேவையான பொருட்கள்:

* வஞ்சரை மீன் அல்லது பாறை மீன் – 2 கிலோ
* பாசுமதி அரிசி – 1 கிலோ
* எண்ணெய் – 200 மில்லி
* நெய் – 50 மில்லி
* வெங்காயம் – 1 கிலோ
* தக்காளி – 1 கிலோ
* மிளகாய் – 7-10 காரம் தேவைக்கு
* தயிர் – 100 மில்லி
* எலுமிச்சை – 1
* இஞ்சி பூண்டு – 2 மே.கரண்டி
* ஏலம்,பட்டை,கிராம்பு – தலா 2
* மிளகாய்த்தூள் – 2 – 3 மே.கரண்டி
* மஞ்சள் தூள் – 1 மே.கரண்டி
* கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன்
* புதினா – 2 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ – சிறுது
* முந்திரி பருப்பு – தேவைக்கு
* உப்பு – தேவைக்கு

செய்முறை:

மீனை நன்றாக அலசி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.

சுத்தம் செய்த மீனில் தேவைக்கு மிள்காய்தூள் , மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து விரவி ஒரு மணி நீரம் ஊற வைக்கவும்.

பாஸ்மதி அரிசியினை இருபது நிமிடங்கள் அலசி ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசியினை வடிகட்டிவிடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஏலம்,பட்டை,கிராம்பு விரும்பினால் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியினை போடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்த பின்பு அரிசியினை வடிகட்டி தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்த பின்பு மீனை போட்டு பொறித்து எடுக்கவும். அதிகமாக பொரியவிடாமல் சாப்ட்டாக பொறித்து தனியாக வைக்கவும். முந்திரி பருப்பு போட்டு பொன்வறுவலாக வதக்கி தனியாக வைக்கவும்.

அதே எண்ணெயில் மெலிதாக நீட்டமாக நறுக்கிய வெங்காயத்தினை போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்.
பொறித்த வெங்காயத்தில் பாதி வெங்காயத்தினை எடுத்து தனியாக வைக்கவும்.
வாணலியில் பொரிந்த வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ,ஏலம்,பட்டை,கிராம்பு போட்டு வதக்கவும் . பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.

இதனுடன் தேவைக்கு மிளகாய்த்தூள் , இரண்டாக கீறிய பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, புதினா உப்பு சேர்த்து வதக்கவும் . நன்றாக வதங்கிய பிறகு பொறித்த மீன் துண்டுகளை போட்டு மூடி போட்டு குறைந்த தணலில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். மீன் போட்ட பின்பு சட்டியினை கிளற வேண்டாம். அதிகம் கிளறினால் மீன் உடைந்துவிடும்.

லேயர் மீன் பிரியாணி தம் போடும் முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் சிறுது உதிரியாக வடித்த சாதம் அதன் மேலே சிறுது பொறித்த வெங்காயம் இதன் மேலே மீன் துண்டுகளுடன் இருக்கும் மசாலா போடவும் அடுத்த லேயர் சோறு மேலே பொறித்த வெங்காயம் மீன் கலவை இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக போடவும். கடைசி லேயர் மேலே பொறித்த மீன் கலவை போட்டு பொறித்த வெங்காயம், பொறித்த முந்திரி ,எலுமிச்சை சாறு, சிறுது பாலில் குங்குமப்பூ கலந்து பிரியாணி மேலே சுற்றி வரை ஊற்றவும்.
சட்டியினை இருக்கமான மூடி போட்டு மூடி அதன் மேலே கனமான பொருள் ஏதாவது வைத்து 15 – 20 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
கால் மணி நேரம் கழித்து மூடியினை திறந்து ஒரு பக்கமாக மேலிருந்து கீழே வரை மிக்ஸ் செய்து நடுவில் உள்ள மீன் உடையாமல் பரிமாறவும்.