Author Topic: ~ கோதுமை குழிப்பணியாரம் ~  (Read 371 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோதுமை குழிப்பணியாரம்



தேவையானபொருட்கள்:

கோதுமை மாவு -ஒரு கப்
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை
(கேரட்,உருளைக்கிழங்கு,பட்டாணி)- தலா ஒருகப்
வெங்காயம்,(பொடியாக நறுக்கியது)- ஒரு கப்
பச்சைமிளகாய்(பொடியாக நறுக்கியது)-ஒருகப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்-பொரிப்பதற்கு

செய்முறை :

முதலில் கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பின்பு பொடியாக நறுக்கியகாய்கறி கலவையுடன், வெங்காயம் சேர்த்து வேக வைத்து கொள்ளவேண்டும்.
அதனுடன் சிறிதளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைசேர்த்துகொள்ளவேண்டும்.
பிசைந்து கலவையை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.-
பின்னர் ஒவ்வொரு உருண்டையையும், கோதுமைமாவு கரைசலில்
தோய்த்து எடுத்து, எண்ணெய் தடவிய பணியாரக் கல்லில் போட்டு
வேகவைத்து எடுத்து பரிமாறவும்.