Author Topic: ~ பிரட் – உருளைக்கிழங்கு கட்லெட் ~  (Read 446 times)

Offline MysteRy

பிரட் – உருளைக்கிழங்கு கட்லெட்



தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3
வெள்ளை பிரட் துண்டுகள் – 4
பிரட் தூள்கள் – 1 /2 கப்
மைதா – 1 /2 கப்
வெங்காயம் நறுக்கியது – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – 4 – 5 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி

செய்முறை:

உருளைகிழங்கை தோலுரித்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும் அல்லது துருவிக் கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
பின் அனைத்து மசாலா தூள்களையும், மசித்து வைத்துள்ள உருளைகிழங்கும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பிரட் துண்டுகளை நீரில் ஊற வைத்து, தண்ணீரை பிழிந்து விட்டு உருளைகிழங்குடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வேண்டிய வடிவில் தட்டிக் கொள்ளவும்.
மைதாவில் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து லூசாக கரைத்துக் கொள்ளவும்.
தட்டி வைத்துள்ள கட்லெட்டை மைதா மாவில் தோய்த்து , உடனே பிரட் தூளில் நனைத்து எடுத்து, எண்ணெயில் இட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.