Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ வெற்றிலை நெல்லி ரசம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வெற்றிலை நெல்லி ரசம் ~ (Read 320 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222243
Total likes: 27545
Total likes: 27545
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வெற்றிலை நெல்லி ரசம் ~
«
on:
January 06, 2016, 08:30:33 PM »
வெற்றிலை நெல்லி ரசம்
தேவையான பொருட்கள்:
முழு நெல்லிக்காய் – 10,
வெற்றிலை – 20,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 6 பல்,
வால் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
* நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.
* கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெறும் வாணலியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும்.
* பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
* நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.
* அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்: குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை இடுக்கு ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ வெற்றிலை நெல்லி ரசம் ~