Author Topic: ~ வேர்க்கடலை சுண்டல்.. ~  (Read 378 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227464
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வேர்க்கடலை சுண்டல்.. ~
« on: December 29, 2015, 03:30:25 PM »
வேர்க்கடலை சுண்டல்..



தேவையானபொருட்கள்:

பச்சை வேர்க்கடலை ஒரு கப்,
காய்ந்த மிளகாய் 2,
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்,
மல்லி (தனியா) ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை 10 இலைகள்,
எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

வேர்க்கடலையை முதல் நாளே ஊறவைக்கவும்.
மறுநாள் காலை குக்கரில் சிறிதளவு நீர் விட்டு, வேர்க்கடலை, உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
காய்ந்த மிளகாய், மல்லியை (தனியா) வெறும் வாணலியில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேகவைத்த வேர்க்கடலையைப் போட்டு, மிளகாய் தனியா பொடி தூவி கிளறி இறக்கவும்.