Author Topic: ~ பழஞ்சோறு ~  (Read 312 times)

Offline MysteRy

~ பழஞ்சோறு ~
« on: December 28, 2015, 08:10:25 PM »
பழஞ்சோறு



தயார் செய்யும் முறை:

பலர் நேற்றைய சாதம் அதிகமாகிவிட்டால் அதை வீண் எனவும் உடலுக்கு கெடுதல் எனவும்  கருதுகிறார்கள். ஆனால் பழைய சோறு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அபாரமான நோய் எதிர்ப்பு (B6, B12) சக்தி உள்ளது.
கிராமப்புறங்களில் இன்றும் நேற்றைய சோற்றை வீணாக்குவதில்லை.
எப்படி பழைய சோற்றை சாப்பிடுவது?
இரவு சோறு அதிகமாகி மீதம் வந்துவிட்டால் கவலைப்படாமல் அச்சோறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கிளறி மூடி வைத்துவிடவும். (வெந்நீர் வேண்டாம். பச்சைத்தண்ணீர் போதும்)
அடுத்த நாள் காலையில் இதை தாராளமாக உண்ணலாம். தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இச்சோற்றில் குடலுக்கு ஆரோய்க்கியம் தரும் நிறைய உயிர் சத்துகள் உள்ளன. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.
இச்சோற்றுடன் தொட்டுக்க நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எந்த கூட்டும் சாப்பிடலாம் என்றாலும் கிராமப்புறங்களில் கூட்டு இல்லை என்றால் பச்சை மிளகாயையோ, சின்ன உள்ளியை உப்புடன் சேர்த்தோ, மோர் சேர்த்தோ, அல்லது உப்பும் புளியும் கலவை செய்தோ சாப்பிடுவார்கள்.