Author Topic: ~ நாட்டுக்கோழி குழம்பு ~  (Read 379 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ நாட்டுக்கோழி குழம்பு ~
« on: December 21, 2015, 07:23:33 PM »
நாட்டுக்கோழி குழம்பு



தேவையான பொருள்கள்:

நாட்டுக் கோழி கறி – ஒரு கிலோ
சி.வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – இரண்டு
பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ – தாளிக்க
எண்ணை -தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 15
மல்லி – 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 பத்தை
கசகசா – ஒரு டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும்.
சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும்.
மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,
தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
வெங்காயதம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
இப்போது கோழிக் கறியை நன்கு கழுவவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.
வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் ரூ சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.