Author Topic: ~ பயறு பனீர் சுண்டல்  (Read 314 times)

Offline MysteRy

~ பயறு பனீர் சுண்டல்
« on: December 21, 2015, 07:16:13 PM »
பயறு பனீர் சுண்டல்



தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பச்சைப் பயறு – 2 கப்,
பனீர் – 10 துண்டுகள்,
கேரட் துருவல் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.