Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை ~ (Read 434 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226796
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை ~
«
on:
December 18, 2015, 07:52:58 PM »
பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை
செம்முள்ளி என்பது சிவப்பு முள்ளி என்றும் குறிக்கப்பெறும். இந்தியா முழுமையும் வெப்பமான பகுதிகளில் இது விளையும். இச்செடி இரண்டு அடி உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியின் அடித்தண்டு மருத்துவ குணம் வாய்ந்தது.
பூக்கள் கிச்சிலிப்பழ நிறத்தைப் பெற்றவை. இச்செடி வருடம் முழுவதும் பூக்கக் கூடிய ஒன்று. இதன் வேர் மரத்தைப் போலவும் அடியில் அநேக சிறிய வேர்கள் கிளைத்தும் இருக்கும். இதன் இலைச் சாறு கசப்புச் சுவையுடையதாய் இருக்கும். பூக்கள் கனகாம்பரம் பூக்களை ஒத்ததாய் இருக்கும். இலைகள் முட்கள் நிறைந்ததாய் இருக்கும். செம்முள்ளியின் இலைகள், தண்டுப் பகுதிகள் சற்று விரைப்பானவை. இலைகள் 100 மி.மீ. நீளமும் 40 மி.மீ. அகலமும் உடையது. முட்டை வடிவ இலையில் மூன்று முதல் ஐந்து என்னும் எண்ணிக்கையில் மெல்லிய கூர்மையான சற்று வெளிர் நிற முட்களைக் கொண்டு விளங்கும். இலைச் சாறு வியர்வையை உண்டாக்கும் தன்மையுடையது. இதனால் காய்ச்சல் குணமாகும்.
சளித்தொல்லை யினின்று விடிவு ஏற்படும். நெஞ்சினைப் பற்றித் துன்பம் செய்யும் கோழையை அறுத்து சுகம் தரும். உள்ளங்கால் குதிக்கால் ஆகியவற்றில் ஏற்படும் வெடிப்புக்கு இதன் சாற்றினை பூசுவதால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும். இப்பூண்டை நெருப்பிலிட்டுக் கொளுத்திப் பெற்ற சாம்பலை பாண்டு (சோகை, வீக்கம்), இருமல் இவற்றிற்குக் கொடுக்க குணமாகும். இதன் வேரை மேற்பூச்சாகப் பயன்படுத்த கொப்புளங்கள், கிரந்திப் புண்கள் குணமாகும்.
செம்முள்ளியின் இலைகள், தண்டு இவற்றை எண்ணையில் இட்டு மேற்பூச்சாகப் பூச காயங்கள், விரணங்கள் குணமாகும். செம்முள்ளியின் இலைச்சாறு வயிற்றுக் கோளாறுகள், சிறு நீரகக் கோளாறுகள், காய்ச்சல், மூக்கொழுக்கு இவற்றைக் குணப்படுத்தும். இலை மற்றும் பூங்கொத்து சிறுநீரைப் பெருக்கக் கூடியது. வீக்கத்தை வற்றச் செய்வது, மூட்டு வலியை குணமாக்கக் கூடியது. ஈரல்களுக்கு பல மூட்டக் கூடியது. சர்க்கரை நோயைத் தணிக்கக் கூடியது. கருத்தடைக்கு உதவுவது, குறிப்பாக ஆண்களின் விந்துக்களின் பயணத் தன்மையைக் குறைப்பதால் கருத்தடைக்கு உதவுகிறது.
ஒட்டுண்ணிக்களான நோய்க் கிருமிகளைப் போக்க வல்லது. இந்த மூலிகை தமரக நோய்களை, அதாவது இதயத்தைப் பற்றி வரும் நோய்களைக் கண்டிக்கவும், வயது முதிர்வின்போது பலரையும் பாதிக்கின்ற மறதி நோயையும் குணமாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. செம்முள்ளி பூஞ்சக் காளான்களை, நுண்கிருமிகளை போக்கும் தன்மை பெற்றது. செம்முள்ளி வாயைப் பற்றி நின்று பற்களை சொத்தைப் படுத்தும் நுண்கிருமிகளையும் எதிர்த்து நின்று தடுப்பதோடு வந்தவற்றையும் விரட்ட வல்லது. மேலும் மத்திய நரம்பு மண்டலத்தை (சி.என்.எஸ்.) பலப்படுத்த வல்லது. மன அழுத்தத்தைப் போக்க வல்லது.
* இந்திய மருத்துவர்கள் செம்முள்ளியின் வேர்ப் பகுதியை விஷக் காய்ச்சல் (வைரஸ் ஃபீவர்)களைப் போக்குவதற்காகப் பயன்படுத்துவர். செம்முள்ளி இலைகள் சிலவற்றை ஓர் பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்துக் தீநீராக்கி வடிகட்டி இனிப்பு சேர்த்து சிறிது சிறிதாகக் குடிப்பதால் விஷக் காய்ச்சல் விலகிப் போகிறது.
* பற்களுக்கும் ஈறுகளுக்கும் உறவு முறிந்து இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிதல், பற்களில் காணப்படும் ஆட்டம், பற்சொத்தை, பற்கூச்சம் ஆகிய நோய்களைக் குணப்படுத்த செம்முள்ளிச் சமூலம் மிகச் சிறந்த மூலிகை ஆகும்.
* செம்முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியை தீநீர் தயாரித்து அவ்வப்போது வாய் கொப்புளித்து வருவதால் பற்கூச்சம், பல்லில் சீழ், ரத்தம் கசிதல் பற்சொத்தை, பல் ஆட்டம், பல் அரணை ஆகியன விரைவில் குணமாகும்.
* செம்முள்ளசிச் செடியின் காய்ந்த வேர், காய்ந்த இலை இவற்றைப் பொடித்து பல்துலக்கு வதற்கு பற்பொடிபோல பயன்படுத்துவதால் பற் களைப் பற்றிய கிருமிகள் அதனால் விளைந்த பல் ஆட்டம், பற்சொத்தை பல்லில் கசியும் ரத்தம், சீழ் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதனால் பற்கள் பலம் பெறுவதோடு ஆரோக்கியமும் பெறும். இதனாலேயே செம்முள்ளிக்கு “வஜ்ஜிர தந்தி” என்ற பெயர் அமைந்தது. வஜ்ஜிரதந்தி என்பதற்கு “வைரம் போன்ற பற்கள்” என்பது பொருள் ஆகும்.
* செம்முள்ளியின் இலைகளை நசுக்கிப் பசையாக்கி அடிபட்ட காயங்களின் மேற்பற்றாக போடுவதால் வீக்கம், வலி ஆகியன குறைந்து காயங்கள் சீழ்பிடிக்காமல் ஆறுவதோடு வடுக்கள் வராத வண்ணமும் புண்களை ஆற்றும்.
* செம்முள்ளி இலைப் பசையை மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் கொப்புளங்கள் மூட்டு வலிகள் ஆகிய நோய்கள் குணமாகும்.
* செம்முள்ளி சமூலப் பசையை எடுத்து தலைக்குத் தேய்த்து வைத்திருந்து பதினைந்து நிமிடம் கழித்து குளித்து விடுவதால் பூஞ்சக் காளான்கள் பற்றிப் பரவி ஏற்படுத்துகின்ற பொடுகு, கரப்பான், புழுவெட்டு போன்ற நோய்களை விரட்டி தலை முடி உதிர்வதைத் தடுக்கிறது. அடர்ந்த முடி வளர்வதற்கு ஆதாரமாக அமைகின்றது.
* செம்முள்ளி இலைகளை அரைத்து மேற்பற்றாகப் போட குதிக்கால் வெடிப்பு, அரிப்பு ஆகியன குணமாகின்றன.
* செம்முள்ளியின் தண்டுப் பகுதியைக் காய வைத்து சூரணமாக்கித் தீநீர் ஆக்கிக் குடிப்பதால் கக்குவான் இருமல், குத்திருமல், வறட்டிருமல் ஆகியன விரைவில் குண மாகும்.
* செம்முள்ளி சமூலத்தைக் காய வைத்து சூரணித்துக் குடிப்பதால் சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், மூட்டு வலிகள், மஞ்சட்காமாலை, ஈரல் வீக்கம், அடைப்பு ஆகியன குணமாகும். மஞ்சள் மற்றும் நீலக் கனகாம்பரம் போல மலையடி வாரத்திலும் ஆற்றங்கரை ஓரத்திலும் அழகான பூக்களோடு விளங்கும் செம்முள்ளி பல்வேறு கொடும் நோய்களைத் தீர்க்கிறது என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ பல் நோய், காயங்களுக்கு மருந்தாகும் செம்முள்ளி இலை ~