Author Topic: ~ கோதுமை பிரெட் உப்புமா ~  (Read 368 times)

Offline MysteRy

~ கோதுமை பிரெட் உப்புமா ~
« on: December 17, 2015, 07:38:03 PM »
கோதுமை பிரெட் உப்புமா



தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் துண்டுகள்  –  8
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 3
கடுகு – 1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு – தலா 1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
எண்ணெய்
கொத்தமல்லி தழை

செய்முறை :

• வெங்காயம் – பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்
• பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக்கொள்ளவும். (ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் ஈஸியாக அரைபடும்)
• கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு – உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
• நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பை சேர்த்து வதக்கவும்.
• அடுத்து உதிர்த்த பிரெட்டை வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பிரட்டவும்.
• ப்ரெட் ஓரளவு சூடேறியதும் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கோதுமை பிரட் உப்புமா தயார். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு :
• ரொட்டியில் ஏற்கனவே உப்பு இருக்கும். உதிர்த்த பிரட் சேர்த்த பின் அதிக நேரம் வதக்க கூடாது. வதக்கினால் உப்புமா வளவள வென ஆகிவிடும்