Author Topic: ~ பாசிப்பருப்பு கொழுக்கட்டை ~  (Read 301 times)

Online MysteRy

பாசிப்பருப்பு கொழுக்கட்டை



தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – ஒரு கப்,
பச்சரிசி – அரை கப்,
தண்ணீர் – ஒன்றரை கப்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – சிறு துண்டு,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• பச்சரிசியை ரவை போல் உடைத்து கொள்ளவும்.
• இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியா 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
• வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கிளறவும். வதங்கியவுடன், ஊறவைத்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறவும். பின்னர் தண்ணீரை விட்டு வேகவிடவும்.
• முக்கால் பதம் வெந்தவுடன் பச்சரிசி ரவை, உப்பு சேர்த்துக் கிளறவும். தீயைக் குறைத்து வைத்து, வாணலியை மூடி வைக்கவும். ரவை வெந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும்.
• பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெந்த உப்புமாவை ஒரு தட்டில் போட்டு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
• சுவையாக சத்தான பாசிப்பருப்பு கொழுக்கட்டை ரெடி