Author Topic: ~ கொத்தமல்லி சாண்ட்விச் ~  (Read 374 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226931
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தமல்லி சாண்ட்விச்



தேவையான பொருட்கள்:

பிரெட் – 4 ஸ்லைஸ்,
வெண்ணெய் – தேவைக் கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,
பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி – 2,
உப்பு – தேவைக்கேற்ப.
அரைக்க…
கொத்தமல்லி – 3/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1/2 இஞ்ச் துண்டு

செய்முறை:

அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே தேவையான அளவு இந்த விழுதை வைத்து நன்கு மூடவும். தவாவில் வெண்ணெய் சேர்த்து, பிரெட்டை இரண்டு பக்கமும் நன்கு டோஸ்டு செய்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.