Author Topic: ~ தேங்காய் லட்டு ~  (Read 464 times)

Online MysteRy

~ தேங்காய் லட்டு ~
« on: November 08, 2015, 10:19:11 PM »
தேங்காய் லட்டு



தீபாவளி வரப் போகிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்து கொண்டிருப்பீர்கள். அப்படி பலகாரங்களை செய்யும் போது, பெரும்பாலான வீடுகளில் நிச்சயம் லட்டு செய்வார்கள்.

பொதுவாக கடலை மாவைக் கொண்டு தான் லட்டு செய்வோம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக, தீபாவளிக்கு தேங்காய் லட்டு செய்வோம். இந்த தேங்காய் லட்டு செய்வது என்பது மிகவும் ஈஸியானது.

மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சரி, இப்போது அந்த தேங்காய் லட்டுவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துருவிய உலர்ந்த தேங்காய் - 3 கப்

சர்க்கரை - 2 கப்

பால் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

பின் சர்க்கரையை சேர்த்து கிளறி, தேங்காயானது பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, அதனை இறக்கி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

பின்பு கலவையானது வெதுவெதுப்பாக ஆனப் பின்னர், அதனை உருண்டைகளாகப் பிடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிர வைத்தால், சூப்பரான தேங்காய் லட்டு ரெடி!!!

Offline Nick Siva

Re: ~ தேங்காய் லட்டு ~
« Reply #1 on: November 08, 2015, 10:23:00 PM »
Naan oru vaati itha ennoda restaurant la try panra mystery.... Nice tips mystery.... kalakkunga ithu pola tips koduthu . 8)

Online MysteRy

Re: ~ தேங்காய் லட்டு ~
« Reply #2 on: November 08, 2015, 10:29:03 PM »
Thanks nickuu  :) :)

Try pani parunga nickuu :) :)