Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 876 times)

Online MysteRy



இளநீர் அல்லது தேங்காய் உடைத்த நீர் சேர்த்து கோதுமை மாவைப் பிசைந்து சப்பாத்தி செய்தால்... மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

Online MysteRy



தீப்புண் கொப்புளிக்காமல் இருக்க ஓர் உபாயம். தீ பட்ட இடத்தை நீரால் கழுவிவிட்டு... வேகவைத்த வெங்காயத்தை மசித்து, சிறிது தேங்காய் எண்ணெயையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்துக் குழைத்துப் பூசினால்... புண் கொப்புளிக்காமல் இருக்கும்.

Online MysteRy



முட்டைகோஸை சாறு எடுத்து, முகத்தில் தடவி வந் தால்... முகச்சுருக்கம் மறையும்.

Online MysteRy



மெழுகுவர்த்தியை ஏற்றுவதற்கு முன் அதன் திரியில் கொஞ்சம் டேபிள் சால்ட் தடவினால், அது நீண்ட நேரம் பிரகாசமாக எரியும்.

Online MysteRy



பண்டிகைக்கு மைசூர்பாக், லட்டு, பர்ஃபி செய்யும்போது விழும் துகள்களை, சுண்ட காய்ச்சிய பாலில் சேர்த்து பாயசமாக செய்தால்... சுவையோ சுவை!

Online MysteRy



பூரி மசாலா செய்யும் போது சிறிது கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள்... நல்ல வாசனையாகவும், கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

Online MysteRy



குலாப் ஜாமூன் மிக்ஸை வைத்து குலாப் ஜாமூன் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அதில் உப்பு, காரம், பனீர் சேர்த்துப் பிசைந்து பொரித்தெடுத்து, ‘கிரேவி'யில் சேர்த்து அட்டகாசமான `பனீர் கோஃப்தா’ தயாரிக்கலாம்.

Online MysteRy



காபி, டீ கொடுக்கும் பீங்கான் கோப்பை மற்றும் குக்கர் கறை படிந்துள்ளதா..? ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி நன்கு அழுத்தி தேயுங்கள். பிறகு கழுவுங்கள். கறை போயே போச்சு!

Online MysteRy



சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கைவசம் க்ரீம் இல்லையா? சிறிது வெண்ணெயில் சிறிதளவு பாலைக் கலந்து நன்கு கலக்கி, அதை க்ரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.