Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வீட்டுக்குறிப்புக்கள்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வீட்டுக்குறிப்புக்கள்! ~ (Read 746 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223141
Total likes: 27837
Total likes: 27837
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வீட்டுக்குறிப்புக்கள்! ~
«
on:
November 02, 2015, 07:10:02 PM »
வீட்டுக்குறிப்புக்கள்!
மீன்களை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதன் சுவை ஊரையே அள்ளிக் கொண்டு போகும்.
ஒரு முறை அப்படி சாப்பிட்டு விட்டால் எப்போதுமே மீனை பொறித்தே சாப்பிட வேண்டும் என்று எண்ணுவீர்கள்.
அப்படி மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும்.
அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள்.
இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.
மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துவிட்டு மீன்களைப் பொறித்தால் வாசனை நம் வீட்டைத் தாண்டாது.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
குறிப்பாக கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை நன்கு கழுவிய பின்னர் நறுக்குங்கள்.
ஆனால் கத்திரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை நறுக்கியப் பின்னர் சமைக்கும் வரை தண்ணீரிலேயேப் போட்டு வையுங்கள்.
வெங்காயத்தை நான்கு பாகமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்தால் பொடியாக நறுக்கும்போது கண்கள் எரியாது.
பூண்டை தோல் ஊரித்து ஆற வைத்து பின்னர் சமைத்தால் உடலுக்கு நல்லது.
பூட்டை தட்டிப் போடுவதை விட, தோல் உரித்து காற்றாட விட்டு சமைப்பதே சிறந்தது.
முட்டையைப் பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் நிச்சயமாக மஞ்சள் தூளும், சிறிது மிளகு தூளும் சேர்த்து செய்வது நல்லது.
பொறியல் அல்லது நூடுல்ஸ் வகைகளில் முட்டையை சேர்ப்பதாக இருந்தால் தனியாக அதனை பொறித்து பின்னர் சேர்ப்பது சுவையாக இருக்கும்.
பொறியல் மற்றும் நூடுல்ஸ் வகைகளில் நேரடியாக பச்சை முட்டையை சேர்த்து கிளறுவதால் நாம் செய்யும் உணவு பொருள் குழகுழப்பாக மாறுவதுடன் ஆறியதும் முட்டை நாற்றம் அதிகமாக இருக்கும்.
பொங்கல் செய்யும் போது, தாளிக்க பயன்படுத்தும் மிளகை அப்படியே முழுசாக போடுவதால் அதன் நன்மை உடலுக்கு முழுதாகப் போய்ச் சேருவதில்லை. பலரும் அதனை தனியாக எடுத்து வெளியே போட்டு விடுவார்கள்.
அப்படி இல்லாமல் மிளகை ஒன்றும் பாதியுமாக உடைத்து போட்டால் குறைவான மிளகு போட்டாலும் காரம் அதிகமாக இருக்கும், மிளகை தூக்கி எறிய முடியாது.
தோசை சுடுவது என்பது ஒரு பெரிய விஷயம்தான். ஏன் எனில் சிலர் தோசையையே இட்லி போல சுடுவார்கள். சிலருக்கு தோசையை சப்பாத்தி போலத்தான் செய்யத் தெரியும்.
ஆனால் சில முக்கியமான விஷயங்களை செய்தால் தோசை, தோசை போலவே வரும்.
அதாவது, தோசைக்கு மாவு மிகவும் தளர்வாக இல்லாமல் சிறிது கெட்டியாகவே இருக்க வேண்டும்.
தோசைக் கல் நன்கு அடுப்பில் வைத்து காய்ந்த பின்னர் தான் தோசையை வார்க்க வேண்டும்.
ஒவ்வொரு முறை தோசை சுடும்போதும், வெங்காயம் அல்லது எண்ணெயில் நனைத்த துணியைக் கொண்டு தோசைக் கல்லை முழுவதுமாக துடைப்பது நல்லது.
தோசை வராமல் போனால் உடனடியாக தோசைக் கல்லின் மீது உப்புத் தூளைக் கொட்டி முழுவதுமாக தடவி பின்னர் உப்பை தள்ளிவிட்டு தோசை வார்த்தால் அழகாக வரும்.
கொழுக்கட்டை செய்யும் போது சில சமயம் கெட்டியாக இருக்கிறதா அதற்கு ஒரு நல்ல யோசனை.
அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக (தோசைமாவு பதத்துக்கு) அரைத்துக் கொள்ளவும்.
அதனை அடுப்பில் வாணலி வைத்து மாவைக் கொட்டி கெட்டியான பதத்திற்கு கிளறுங்கள். பந்து போல் உருண்டு வரும்.
அப்புறம் மாவை எடுத்து மெல்லியதாய் உங்களுக்கு வேண்டிய வடிவத்தை செய்யுங்கள்.
மெல்லிய வடிவில் வாயில் போட்டால் கரைந்துவிடக்கூடிய கொழுக்கட்டை
ஜாம் பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு பொருளாகும். ரொட்டிக்கு மட்டும் அல்லாமல் தோசைக்கு, சப்பாத்திக்கு என எல்லாவற்றிற்கும் ஜாம் இணை உணவாக அமையும்.
அப்படிப்பட்ட ஜாமை வீட்டில் தயாரிக்க விரும்பினால் சில முக்கிய குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
ஜாம் தயாரிக்கும்போது அதில் சில துண்டு ஆப்பிள் பழத்தை சேர்த்தால் சுவை அலாதியாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
ஸ்ட்ராபெர்ரி ஜாம் தயாரிக்கும்போது அதில் சில சொட்டு எலுமிச்சை சாறு சேர்ப்பதால், ஜாம் கெட்டியாக இல்லாமல் தளர்த்தியாக இருக்கும்.
வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
பழங்களை பதப்படுத்தி தயாரிக்கப்படும் ஜாம்களை சாப்பிடுவதால் முதுமையில் கண்களின் திரையில் வரும் பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்கிறது மருத்துவம்.
சாதம் மீந்து விட்டாலோ அல்லது குழம்பு மீந்து விட்டாலோ உடனடியாக அதனைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து விடலாம்.
இல்லை அதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து நாளை பயன்படுத்த முடியும் என்றால் அவ்வாறு செய்யலாம்.
இது அல்லாமல் கெட்டுப்போன உணவுப் பொருட்களை யாருக்கும் பிச்சையாகக் கூட கொடுக்க வேண்டாம். நீங்களும் சாப்பிட வேண்டாம்.
கெட்டுப் போன பொருட்களில் இருக்கும் கிருமிகள் எந்த வகையானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். சில சமயங்களில் பிரட் போன்ற பொருட்களில் இருக்கும் பூஞ்ஞைகள் உயிருக்கு உலை வைத்து விடலாம்.
எனவே கெட்டுப் போன பொருளைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவத்திற்கு செலவு செய்வதை விட, அதனை தூக்கி எறிவதே மேல்.
கெட்டுப் போய்விடும் என்று தெரிந்தால் அதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து நாற்றமடிக்கச் செய்யவும் வேண்டாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223141
Total likes: 27837
Total likes: 27837
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ வீட்டுக்குறிப்புக்கள்! ~
«
Reply #1 on:
November 02, 2015, 07:11:13 PM »
வீட்டுக்குறிப்புக்கள்
தேனீர் தயாரித்து அனைவருக்கும் கொடுக்கும் முன்பு ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டை போட்டு வைத்தால் உணவுப்பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும்.
பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம்.
பூரிகள் மென்மையாகவும் பெரிதாகவும் வர மாவில் நெய்யைக் கலக்கவும்.
குலோப்ஜாமூன் மாவில் சிறிதளவு பன்னீரைச் சேர்த்தால் கறுப்பு குலோப்ஜாமூன் தயார்.
ஒரு பாத்திரத்தில் குளிர் நீரை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து உரித்த உருளைக் கிழங்குகளை போட்டு வைத்தால் உருளை புதிதாக இருப்பதுடன் வெள்ளை நிறம் கெடாமல் இருக்கும்.
பால் காய்ச்சுவதற்கு முன் அந்த பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றினால் பால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.
சமையல் எண்ணெயில் ஊசல் வாடை வராமல் தடுக்க அதனுடன் 6-7 பச்சை மிளகாய்களை சேர்க்கவும்.
சப்பாத்தி அல்லது பூரி மாவில் சிறிதளவு எண்ணெயை தெளித்து வைத்தால் நீண்ட நேரத்திற்கு மாவை கெடாமல் பாதுகாக்கலாம்.
சப்போட்டா, அன்னாசிப்பழம் ஆகியவற்றை குளிர் சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது அது ஓரளவு வெப்பமான சூழ்நிலையில்தான் கெடாமல் இருக்கும்.
மீன்கள் வாடை வராமல் இருக்க கழுவிய மீனை வெதுவெதுப்பான பாலால் சுத்தம் செய்யவும்.
சாதம் வடிக்கும் போது அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் வெண்மையாகவும், சாதம் உதிரி உதிரியாகவும் இருக்கும்.
பன்னீரை நீண்ட நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் அது கடினமாக மாறி விடும் இதை மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.
சமைக்கும் போது காய்கறிகள் அதன் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும்.
பழங்களை நறுக்கிய பிறகு அதில் பழுப்பு ஏறாமல் இருக்க அன்னாசி அல்லது எலுமிச்சை சாற்றில் நனைத்து பிறகு பராமரிக்கவும்.
ஆம்லேட்டுகள் நன்றாகவும் ருசியுடனும் இருக்க முட்டையை உடைத்து ஊற்றியவுடன் சிறிது பாலையும் உளுத்தம்மாவையும் அதனுடன் சேர்த்து ஆம்லேட் தயாரிக்கவும்.
வெங்காயம் வதக்கும்போது நல்ல பொன்னிறமாக ஆகவும், எளிதில் ஜீரணமாகவும் அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விடுங்கள்.
பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.
எலுமிச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்களை சிறிது நேரம் வென்னீரில் போட்டு வைத்த்து பின்னர் பிழிந்தால் நிறைய சாறு வரும்.
வீட்டிலேயே பிஸ்கட் தயாரிப்பவர்கள் பிஸ்கட் மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் அதற்காக வருந்த வேண்டாம், மாவை சிறிது நேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைத்துவிட்டால் மாவு நன்கு கெட்டியாகி விடும், பிஸ்கட்களும் மொறு மொறுவென இருக்கும்.
எந்த ஒரு மாவை பிசைந்த பிறகும் அதன் மீது ஈரமான பருத்தி துணியை மூடிவைத்தால் மாவு காயாமல் இருக்கும்.
இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
காய்ந்த பழங்களை பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
தண்ணீரில் சிறிதளவு வினீகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
உருளைக்கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்ககூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
காய்கறிகளை கொதிக்க வைக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்தால் காய்கறிகளின் நிறம் குறைவதை தடுக்கலாம், வேர்க் காய்கறிகளை மூடிய பாத்திரங்களில் அடுப்பை சிறிதாக வைத்தும், பச்சைக் காய்கறிகளை திறந்த பாத்திரங்களிலும் சமைக்க வேண்டும்.
பஜ்ஜி மாவில் சிறிதளவு அரிசிமாவை கலந்தால் மொறுமொறுப்பு கொடுப்பதுடன் எண்ணெய் பசையையும் குறைக்கலாம்.
பாகற்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதனை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து எவர் சில்வர் பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
காய்கறிகளில் உப்பு அதிகமாக சேர்த்து விட்டால், கோதுமை மாவை உருட்டி அதில் தோய்த்து எடுக்கவும், அதேபோல் எதோ ஒன்றில் காரம் அதிகமாக சேர்த்துவிட்டால் காரத்தை குறைக்க எலுமிச்சை சாற்றை சில சொட்டுகள் விடவும்.
சமைக்கப்படாத பச்சை இறைச்சியை மிருதுவாக்க எலுமிச்சையை தேய்க்கலாம் அல்லது வாழையிலையில் சுற்றி வைக்கலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வீட்டுக்குறிப்புக்கள்! ~