Author Topic: ~ ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் ~  (Read 730 times)

Offline MysteRy

வாக்கியத்தில் ஐந்து வகை!



ட் யூஷனுக்கு வந்த வித்யாவிடம் கோமதி, ‘‘ஆன்ட்டி ‘இதோ வந்துர்றேன்’னு சொல்லியிருக் காங்க. அது வரைக்கும் நாம கத்துக்கிட்டதை ரிவைஸ் பண்ணுவோமா?’’ என்றாள்.
‘‘ஓகே. அக்கா! ஆமா, மேம் கொடுத்திருந்த ஹோம்வொர்க்கை கம்ப்ளீட் பண்ணிட்டீங்களா?’’ என்று வித்யா கேட்க, ‘‘பேஷா! படிக்கட்டுமா?’’ என்று படிக்க ஆரம்பித்தாள் கோமதி.
‘‘ட்ரான்சிடிவ் வெர்ப்ஸ் & like, bring, buy, catch . இன்ட்ரான்சிடிவ் வெர்ப்ஸ் - walk, fly, go,come . சரிதானே, வித்யா?’’
வித்யா பதில் சொல்லும்முன், ‘‘ஹாய், வித்யா! கோமுவோட ப்ராக்ரஸ் எப்படி?’’ என்று கேட்டபடி நுழைந்தார் உஷா மேம். அவருக்கு வணக்கம் சொன்ன வித்யா, ‘‘எக்ஸலண்ட், மேம்’’ என்றாள்.
‘‘ஆன்ட்டி! போன க்ளாஸ்ல வித்யாகிட்ட Passive voice ல ஒரு v.t (ட்ரான்சிடிவ் வெர்ப்) சொல்லச் சொன்னீங்க. அது எனக்குப் புரியல.’’
‘‘க்ராமர்ல active voice, passive voice -னு ரெண்டு இருக்கு, கோமு. object -ஐ கண்டுபிடிக்க ரெண்டு விதமா கேள்வி கேக்கணும். யாரை, எதைனு கேட்டா active voice . யாரால், எதனால்னு கேட்டா passive voice’’ என்று உஷா மேம் சொல்ல,
‘‘மேம்! கோமு அக்கா வாக்கிய அமைப்புகள்... அதான், sentence patterns பத்தித் தெரிஞ்சிக் கிட்டாங்கன்னா ஒரு கலக்கு கலக்கிடுவாங்க...’’ என்றாள் வித்யா.
அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்ட கோமதி, ‘‘ஆன்ட்டி... இன்னிக்கு அதையே பாடமா வெச்சுக்கலாமே’’ என்று கோரிக்கை வைத்தாள்.
‘‘ஓ.யெஸ்... வெச்சுக்கலாமே’’ என்ற மேம், ‘‘வித்யா! வாக்கிய அமைப்புகள் எவைனு நீயே எழுதிப் போடு’’ என்று வித்யாவிடம் மார்க்கர் பேனாவைக் கொடுத்தார்.
இதை எதிர்பார்க்காத வித்யா, ஒரு கணம் சுதாரித்துக் கொண்டு, எழுத ஆரம்பித்தாள்...
1. Subject + Verb
2. Subject + Verb + Object
3. Subject + Verb + Indirect Object + Direct Object
எழுதிவிட்டு மேமைப் பார்த்த வித்யாவிடம், ‘‘முக்கியமான அமைப்புகள் மொத்தம் அஞ்சு இருக்கு. இன்னும் ரெண்டு தெரியலயா?’’ என்று கேட்டு விட்டு அவரே போர்டில் எழுதினார்.
4. Subject + Verb + Complement
5. Subject + Verb + Object + Complement
‘‘கோமு! எல்லாத்திலயும் வெர்ப்னு வருது இல்லியா? அதுங்க ஒண்ணேவா, வேற வேறயா?’’
‘‘புரியல. க்ளூ குடுங்க ஆன்ட்டி.’’
‘‘நீதான் ‘யாரை, எதை’-னு கேட்டு object ஐ கண்டுபிடிக்கிற எக்ஸ்பர்ட் ஆச்சே!’’
போர்டை உற்றுப் பார்த்துவிட்டு, புரிந்து கொண்ட வளாக, ‘‘முதல் வகை வாக்கியத்துல object இல்ல. அதனால, அங்கிருக்கிறது இன்ட்ராசிடிவ் வெர்ப். 2, 3, 5-ம் வாக்கியங்கள்ல object இருக்கு. அதனால அதுங்க ட்ரான்ஸிடிவ் வெர்ப். ஆமா, நாலாவது வகையில Complement வருது. அப்படின்னா... க்யா ஹை ஆன்ட்டி?’’ என்று கோமதி இந்தியில் கேட்க, மேம் தன் மூக்குக் கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்துக் கொண்டே, ‘‘என்ன... நேத்து ராத்திரி இந்திப் படம் பார்த்த பாதிப்பா?’’ என்றார் கிண்டலாக.
‘‘ஆமா ஆன்ட்டி... எனக்கு இந்திப் படம்னா கொஞ்சம் புடிக்கும்...’’
‘‘அப்படியா! சீக்கிரமா இங்கிலீஷ் கத்துக்கிறயோ இல்லியோ, இந்தி கத்துக்குவே போல இருக்கு!’’ என்று கலாய்த்த மேம், ‘‘ Complement னா வாக்கியத்தை நிறைவு செய்யும் ஒரு விஷயம்’’ என்று சொல்ல, ‘‘ Could you please tell me examples for sentence patterns? ’’ என்றாள் கோமதி, ஸ்டைலாக.
‘‘ஷ்யூர்!’’ என்று சிரித்த மேம், வாக்கியங்களை உதாரணங்களாக எழுதிப் போட்டார்.



வித்யா கேட்டாள்... ‘‘ complement ஐ எப்படி கண்டு பிடிக்கறது மேம்?’’ உடனே, கோமதியிடமிருந்தும் ஒரு கேள்வி... ‘‘ Indirect object -ன்னா என்ன ஆன்ட்டி?’’
‘‘போர்டுல இருக்கிற 4-வது, 5-வது வாக்கியங்களைப் பாருங்க. She is an engineer -ங்கிற வாக்கியத்துல subject -ம், complement -ம் ஒருத்தரையே குறிக்குது. அதனால அந்த வாக்கியம் subject complement -ல இருக்கு’’ என்ற மேம், போர்டில் சில வாக்கியங்களை எழுதினார்.



‘‘கோமு! மேல சொன்னதெல்லாம் subject complement வாக்கியம்தான்! ஏன்னு சொல்லு...’’
‘‘மாலாவும் டாக்டரும் ஒருத்தரே. கலாதான் ஹேப் பியா இருக்கா. ராணிதான் பொலைட்டா இருக்கா. அதனால doctor, happy, polite எல்லாம் complement வார்த்தைகள்.’’
‘‘குட். வித்யா... நீ சொல்லு, 5-வது வாக்கியம் எப்படி object complement -னு.’’
‘‘அந்த வாக்கியத்துல the table -ங்கிற object தான் green -ஆக இருக்கு. அதனால, மேம்...’’
‘‘குட். இப்ப indirect object -ஐப் பத்தி கோமு கேட்டா இல்லியா... அதுக்கு வருவோம்...’’
‘‘நான் சொல்லட்டுமா மேம்?’’
‘‘ப்ரொஸீட்..’’
‘‘யாரை, எதைனு கேட்டா direct object வரும். யாருக்குனு கேட்டா indirect object . அதாவது, ‘அவள் பேனாவை யாருக்குக் கொடுக்கிறாள்?’னு கேட்டா, ‘ me -எனக்கு’னு பதில் வருது. அந்த me -ங்கிறது indirect object .’’
‘‘அது மட்டுமில்ல வித்யா. she gives me னு மட்டும் எழுதினா ‘அவ எதைக் குடுத்தா’னு கேட்டா அர்த்தம் முழுமையா வரல. அதுக்கு ஒரு direct object போட்டாதான் அர்த்தம் வருது. வித்யா! சரி, S + V + IO + DO வகை வாக்கியத்துக்கு வேற உதாரணம் சொல்லு’’
‘‘ Ma’am teaches us English ’’என்றாள் வித்யா.
‘‘இதை Ma’ am teaches English to us -னு மாத்திக் கூட சொல்லலாம். Passive voice பத்தி நாம கத்துக்கிறப்ப இதை இன்னும் விரிவா பார்க்கலாம்’’ என்ற மேம், ஐந்து வாக்கிய அமைப்புகளுக்கும் உதாரண வாக்கியங்கள் எழுதி வருமாறு இருவருக்கும் ஹோம்வொர்க் கொடுத்து, அனுப்பினார்.
ஆ ங்கிலத்தில் சிறப்பாகப் பேச, எழுத Phrasal verbs மிக அவசியம். வெர்ப்புடன் Preposition சேர்ந்தால் வருவது Phrasal verb . அதில் உள்ள வார்த்தைகளுக்குத் தனியாக அர்த்தம் கொள்ளக் கூடாது. தமிழில் கூட அப்படி உண்டு. (உ-ம்) கம்பி எண்ணினான் = சிறையில் இருந்தான். கம்பி நீட்டினான் = தப்பித்தான்.
இந்த வகையில் call on என்பது ஒரு Phrasal verb . இதற்கு ‘மேலே கூப்பிடு’ என்று அர்த்தமல்ல. ஒருவரை இருப்பிடம் தேடிச் சென்று சந்தித்தல் என்று அர்த்தம். இதையும்கூட பெரியவர்களை சிறியவர்கள் சென்று சந்திக்கும்போதுதான் உபயோகப்படுத்த வேண்டும். இது பதவியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
(உ-ம்) The P.M called on the President
The Finance Minister called on the P.M .
n He kicked the bucket என்று இன்னொரு Phrasal verb உண்டு. அதற்கு, ‘அவர் இறந்து விட்டார்’ என்று அர்த்தம்! கவிழ்த்து போட்ட ஒரு பக்கெட் மீது ஏறி நின்று, கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டு பக்கெட்டை எட்டி உதைத்து தற்கொலை செய்து கொண்டதைக் குறிக்க ஆரம்பித்து, பொதுவாக இறப்பைக் குறிக்கவும் இதுவே வழக்கத்தில் வந்து விட்டது. ஆனால், இது கொச்சை மொழி ( slang )தான். மரியாதை மிக்கவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு இதை உபயோகிக்கக் கூடாது. அவர்களை அவமானப் படுத்துவதாக ஆகிவிடும்.