Author Topic: ~ மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள் ~  (Read 918 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்


மாலை நேர ஸ்நாக்ஸ்... நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்று. அந்த நேரத்தில் மைதா மற்றும் உடம்புக்கு ஒவ்வாத மாவில் செய்த சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்றவைதான் எத்தனையோ பேருக்குப் பிடித்தவை. இவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துகளை அள்ளித்தருகிற,   குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதாக சிறுதானியங்களிலேயே ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்” என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். ரெசிப்பிகளை செய்துகாட்டியிருக்கிறார் செஃப் இரா.கணேசன்.


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)



தேவையானவை:

இட்லி அரிசி  - 1/4 கிலோ, சாமை - 150 கிராம், குதிரைவாலி - 100 கிராம், உளுந்து - 200 கிராம், கடலைப் பருப்பு - 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் (நறுக்கியது) - தலா 1,  கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து  ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும். குழிப்பணியாரம் செய்யும் தட்டில் மாவை ஊற்றி, வார்த்து எடுக்க வேண்டும்.

பலன்கள்:

குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி  ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது.உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். முழுக்க ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெஜிடபிள் ஆம்லெட்



தேவையானவை:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை - தலா 50 கிராம், பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

 கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை  ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்:

கடலைப்  பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்  பருப்பு, முந்திரி   அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
திரிகடுகம் காபி



தேவையானவை:

மிளகு - 30 கிராம், சுக்கு - 50 கிராம், திப்பிலி - 5 கிராம், கருப்பட்டி, காபி தூள் - தேவையான அளவு.

செய்முறை:

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.

பலன்கள்:

சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள். சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும். மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக்காலத்தில் காலை - மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பச்சைப் பயறு கட்லட்



தேவையானவை:

பச்சைப் பயறு - 1/4 கிலோ, கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம், மஞ்சள் தூள் - சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) - சிறிதளவு, வெங்காயம் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான  அளவு, காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு.

செய்முறை:

 பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.

பலன்கள்:

மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.