Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி! ~ (Read 874 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223672
Total likes: 28039
Total likes: 28039
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி! ~
«
on:
October 14, 2015, 02:40:59 PM »
மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி!
‘‘இனி இல்லத்தரசிகளும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆம், மின் சிக்கனம் என்பது மின்சார உற்பத்திக்குச் சமம். அதோடு புவி வெப்பமயமாகுதலையும் அதன் மூலம் தடுக்கலாம்!’’ என்று உற்சாகப்படுத்தும் தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பின் தலைவர் விஜயன், மின்சார சிக்கனம் தொடர்பான சந்தேகங்களைக் களைகிறார்.
‘‘மின் சாதனங்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?’’
‘‘பொதுவாகத் தரமான, ஸ்டார் வேல்யூ பெற்ற தயாரிப்புகளாக வாங்க வேண்டும். மின்சார சிக்கனத்துக்கு வழிகாட்டக்கூடிய அமைப்பிடமிருந்து சான்று பெற்றிருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக, ஏ.சி-க்களில் நட்சத்திரக் குறியீடு இருக்கும். 5 நட்சத்திரங்கள் பெற்றிருந்தால் குறைந்த அளவு மின்சக்தியை இழுக்கும் என்று அர்த்தம். இவை விலை அதிகம் என்றாலும், இவற்றை வாங்குவதுதான் சிறந்தது.’’
‘‘மின் கட்டணத்தைக் குறைக்க டிப்ஸ் ப்ளீஸ்...’’
‘‘டியூப்லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் பல்பு, எல்இடி பல்பு பயன்படுத்தலாம். இவை குறைந்த மின் நுகர்வில் அதிக வெளிச்சம் தரும். டியூப்லைட்களில் பழைய சோக்குகளை எல்லாம் மாற்றிவிட்டு தற்போது வந்திருக்கும் எலெக்ட்ரானிக் சோக்குகளைப் பயன்படுத்தலாம். இதனால் டியூப்லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் தாமதம் குறைவதோடு, அதனால் வீணாகும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம். மேலும், தூசு படிந்த பல்புகள் மற்றும் அலங்கார விளக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதைத் தடுக்கலாம், மின் விசிறிகளில் எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை உபயோகிக்கலாம், தினமும் ஒன்றிரண்டு துணிகளை அயர்ன் செய்வதைத் தவிர்த்து மொத்தமாக அயர்ன் செய்யலாம். மின்சாதனங்களை ரிமோட் மூலம் மட்டுமே ஆஃப் செய்யாமல், ஸ்விட்ச் மற்றும் பிளக் பாயின்ட் ஸ்விட்ச்சையும் கண்டிப்பாக ஆஃப் செய்ய வேண்டும்.’’
‘‘ ‘வாட்ஸ்’ என்பது என்ன?’’
‘‘வாட்ஸ் என்பது எரிசக்தியின் அளவுகோல். 1000 வாட்ஸ் என்பது 1 யூனிட்.’’
‘‘ஏ.சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற சாதனங்களை மின்சார விரயம் செய்யாமல் எப்படிப் பராமரிப்பது?’’
‘‘கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலோ, சில சமயங்களில் அழுக்கு காரணமாகவோ இறுக்கமாக ஓடும். `இறுக்கமாகத்தானே ஓடுகிறது' என்று இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெல்ட் மாற்ற வேண்டும். தளர்ந்து போன பெல்ட்டிலேயே கிரைண்டர் ஓடினால் அதிக மின்சாரம் செலவாகும். ஏ.சி அறைகளின் சுவரில் வெப்பம் கடத்தா பெயின்ட் அடிப்பது, தரையில் தரைவிரிப்புகளை பயன்படுத்துவது போன்ற முயற்சிகள் அதிக நேரம் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஏ.சி-யை சர்வீஸ் செய்ய வேண்டும். ஃப்ரிட்ஜ் மீது நேரடியாக சூரியஒளி படாமலும், ஃப்ரிட்ஜின் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறும் வைத்தால் மின்நுகர்வு குறையும். ஃப்ரிட்ஜ் தேவையான குளிர்ச்சியடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஆனாலும் அடிக்கடி திறந்து மூடும்போது மின் செலவு அதிகமாகும். வெயில் காலங்களில் வாஷிங் மெஷின் ட்ரையரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அயர்ன் செய்யும்போது ஃபேன் போடுவதைத் தவிர்க்கலாம்.’’
‘‘ஸ்விட்ச்போர்டில் இருக்கும் இண்டிகேட்டர் லைட்டால் மின்சாரம் செலவாகுமா?
‘‘தற்போது பலரும் டிஜிட்டல் மீட்டரை மாற்றிவிட்டு, நவீன ஸ்டாட்டிக் மீட்டரைப் பொருத்துகிறார்கள். அது இண்டிகேட்டர் லைட்டுக்கும் கரன்ட் செலவழிக்கிறது. இதுகுறித்து பலரும் புகார் சொல்லி வருகிறார்கள். எனவே, ஸ்டாட்டிக் மீட்டர் பொருத்தியிருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.’’
‘‘மின்சார அடுப்பு, மின்சார குக்கர் போன்றவற்றைப் பயன்படுத்தலாமா?’’
‘‘சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமன்ட் உள்ள மின்சார அடுப்பு, மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியவை. பதிலாக, இன்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தலாம். இதிலும் மின்சார செலவு இருக்கிறது என்றாலும் சமையல் கேஸை மிச்சப்படுத்தலாம்.’’
‘‘மின் கட்டணம் கணக்கிடும் முறை என்ன?’’
‘‘மின் நுகர்வு கணக்கில் மொத்தம் நான்கு நிலைகள் இருக்கின்றன.
முதல் நிலை: 1-100 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் இல்லை.
இரண்டாம் நிலை: 1-200 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு 1.50 ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் 20 ரூபாய்.
மூன்றாம் நிலை: 1-200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய்; 201-500 யூனிட் வரை யூனிட்டுக்கு மூன்று ரூபாய் கட்டணம்; நிலைக்கட்டணம் 30 ரூபாய்.
நான்காம் நிலை: 1-200 யூனிட் வரை - ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய்; 201-500 யூனிட் வரை யூனிட்டுக்கு 4 ரூபாய்; 500 யூனிட்டுக்கும் மேல் யூனிட்டுக்கு 5.75 ரூபாய். நிலைக்கட்டணம் 40 ரூபாய்.
உதாரணமாக, நீங்கள் 510 யூனிட் மின்சாரம் செலவு செய்திருந்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600 ரூபாய் + அடுத்த 300 யூனிட்டுக்கான 1,200 + கூடுதல் 10 யூனிட்டுக்கான 57.50, இவற்றோடு நிலைக்கட்டணம் 40 ரூபாய் சேர்த்து 1,898 ரூபாய் மின்சாரக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பவர் டேரிஃப் கால்குலேட்டர் மூலமாக உங்களது யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும், அரசு மானியம் எவ்வளவு என்று எல்லாம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் பவர் டேரிஃப் கால்குலேட்டருக்கான லிங்க்:
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ மின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி! ~