அன்புள்ள தபால் பெட்டிக்கு !
அன்பும் ஆசையும் கலந்த ஆசை (அஜித்)யின் வணக்கம் ! அடடே இது என்னை அதிசயம் ?
பொதுவாய் இந்த கிறுக்கன் (FTC ) கவிதை தளத்தை (கவிதை எனும் நினைப்பினில் )தன் கிறுக்கள்களால் குதருபவன் ஆயிற்றே, இவனிடம் இருந்து நமக்கு கடிதமா ? என ஆச்சர்ய படவேண்டாம் தபால் பெட்டியே.அடிப்படையில் நான் உன் அருமை பெருமையை அறியாதவனும்
புரியாதவனும் இல்லை .உன்னோடு ஒட்டி உறவாடும் அளவிற்கு உறவு இல்லாவிட்டாலும்,
எனக்கும் உன்னை மிக பிடிக்கும் ,ஏன் என்று எண்ணுகின்றாயா? என் பள்ளி காலத்தில்
ஒவ்வொரு ஆண்டும் முழுஆண்டு தேர்வின் தேனாய் இனிக்கும் முடிவினை தவறாமல்
தெரிவிப்பதில் உன் பகுதி மிகுதி.பதினைந்து வயதில் அஞ்சல் தலை சேமிக்க நீ இருக்குமிடம்
தேடி அடிக்கடி நான் வருவேன் நினைவிருக்கா? அழகுசிலையாய்,அழகின் அலை வீச
அஞ்சல்தலை வழங்கும் அஞ்சலை அமர்ந்திருப்பாள் , அவள்தம் அழகை அளந்து செல்லவே
அடிக்கடி வருவேன். அடப்பாவி ! கரிசனத்தோடு தான் எனை காண வருகிறாய் என்று
நினைத்தால் அஞ்சலையின் தரிசனத்திற்கு தான் வந்தாயா என்று த்பால்பெட்டியே நீ புலம்புவது புரிகிறது.இந்த கடிதம் உனக்கு கடிதம், இன்னொருவருக்கு நான் தரும் முக்கியத்துவத்தின்
சான்று .
என்றும் அன்புடன்
ஆசை அஜீத்
பின் குறிப்பு - உன்னை நிதம் நிதம் நினைப்பேன் , என்னவளின் கன்னங்களில் மின்னும் வண்ணம்
தனை நீ கொண்டிருப்பதால்.