Author Topic: ~ இயற்கை உணவுகள் ~  (Read 875 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இயற்கை உணவுகள் ~
« on: October 05, 2015, 02:38:54 PM »
இயற்கை உணவுகள்

தாய்ப்பால் உணவு, முதியோர் உணவு, பாரம்பர்ய உணவு..!எளிமை - இனிமைசெய்யும் சமையலில் சரிசெய்ய வேண்டிய சில திருத்தங்களைக் கூறுவதோடு... தாய்ப்பால் சுரப்புக்கான சிறப்பு உணவு, பாரம்பர்ய உணவு, முதியோர்களுக்கான உணவு என சில ரெசிப்பிக்களையும் இந்த இதழில் மிகவும் அக்கறையோடு வழங்குகிறார் ‘இயற்கைப் பிரியன்’ இரத்தின சக்திவேல். படியுங்கள்... செய்துபாருங்கள்... பலன்களை அள்ளிக்கொள்ளுங்கள்!



சமையலுக்கு முன், பின் செய்ய வேண்டியவை!

சிறுதானியங்களில் கற்கள் இருக்கும் என்பதால், தண்ணீரில் தானியங்களை அலசி அரித்து கல், மண்ணைப் பிரித்த பிறகே சமைக்க வேண்டும்.

 இனிப்பு வகைகளான கரும்பு வெல்லம், தென்னை வெல்லம் அல்லது பனை வெல்லம், பேரீச்சை, உலர்திராட்சை, தேன் கலந்த பாகு வகைகளை சிறு சிறு துண்டுகளாகச் செய்து நீரில் கரைத்தால் கீழே கசடுகள் தங்கிவிடும். பின்பு உணவில் சேர்க்கலாம்.

 காய்களை நறுக்கிய பின் தண்ணீரில் அலசினால், அதன் சத்துக்களும் நீரோடு வெளியேறிவிடும் என்பதால், கழுவிய பிறகே நறுக்க வேண்டும்.

 முடிந்த அளவு காய்கறிகளையும் தோலையும் சமையலில் பயன்படுத்த முயற்சிக்கவும். அல்லது அவற்றை சூப்பாக செய்து பருகலாம்.

 காய்கறிகள், பழங்கள், மாவு வகைகளைக் குளிர்சாதனப் பெட்டிகளில் வைப்பதைத் தவிர்க்கவும். அது உடலுக்கு தீங்கு தரக்கூடியது.

 எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவு வகைகள், ஜீரணத்தடைக் கொழுப்பாக உருமாறி ஊறு விளைவிக்கும் என்பதால், பெரும்பாலும் ஆவியில் வேகவைத்த உணவுகளையே சாப்பிடவும்.

 உணவுகளைச் சமைத்தும், சூடு ஆறும் முன்பே சாப்பிடுவது நன்று. நன்றாக ஆறிய பின்னோ, நீண்ட நேரம் ஆனபிறகோ சாப்பிடும்போது, கெட்ட பாக்டீரியாக்கள் உணவுக்குள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 நன்றாகப் பசித்த பின்னரே எந்த உணவையும் சாப்பிடவும்.
 
ஆகாரத்தை அரக்கப்பரக்க ஐந்து நிமிடங்களில் விழுங்காமல், நன்றாக அமர்ந்து மெதுவாக மென்று, நன்கு அரைத்து, பின் விழுங்க வேண்டும். அதுதான் ஜீரணத்துக்கும், ஜீரண உறுப்புகளுக்கும் நல்லது.



கடல் உப்புக்குப் பதில் எலுமிச்சை, நாரத்தை, நெல்லி, தக்காளி, மாங்காய், இந்துப்பு, கறுப்பு உப்பு பயன்படுத்தலாம்.

 மிளகாய் காரத்துக்குப் பதில் குடமிளகாய், மிளகு, திப்பிலி, பஜ்ஜி மிளகாய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

 புளிக்குப் பதில் புளிச்சக்கீரை, நெல்லி, எலுமிச்சை, நாரத்தை, தக்காளி, கொடம்புளியைப் பயன்படுத்தலாம்.

 கூடியவரை நெய், எண்ணெய்களைத் தவிர்த்து... எள், வேர்க்கடலை, சூரியகாந்தி இவற்றை முளைக்கட்டியோ, ஊறவைத்தோ பால் எடுத்து/விழுதாக அரைத்துச் சேர்த்துச் சமைத்தால் உணவில் சுவை கூடும். தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம், போன்ற வெள்ளை விதைகளை தேவையான அளவு சமையலில் இணைக்கலாம். இவற்றால் நல்ல கொழுப்பு கிடைப்பதுடன் தேவையான தெம்பும் கிடைக்கும். எண்ணெயின் சுவையும், மணமும் சுண்டி இழுக்கும்.

 ரீஃபைண்ட் ஆயில், கடலை எண்ணெய் போன்ற நேரடியான எண்ணெய் வகைகளுக்குப் பதில் எண்ணெய் வித்துக்கள், அதாவது, தேங்காய், எள், வேர்க்கடலை போன்றவற்றையோ, கொட்டைப் பருப்புகளை ஊற/முளைக்க வைத்தோ பயன்படுத்தலாம்.

 மாட்டுப்பால் பயன்படுத்தும் சமையலில் தேங்காய்ப்பால், முளைதானியப் பால் வகைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்ல இரண்டு தாவரப்பால் வகைகள் தயாரிப்பு, பாரம்பர்ய மற்றும் முதியோருக்கான இயற்கை உணவுகள் பற்றியும் இரத்தின சக்திவேல் தரும் ரெசிப்பிக்கள்...

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ இயற்கை உணவுகள் ~
« Reply #1 on: October 05, 2015, 02:44:47 PM »
தாய்ப்பால் உணவு

முளைக்கம்புப் பால்/கீர்



தேவையானவை (6 பேருக்கு):

முளைக்கம்பு - 300 கிராம்
 தேங்காய்ப்பால் - தேவையான அளவு
 பேரீச்சை/உலர்திராட்சை/வெல்லம் - 150 கிராம்
(அல்லது)
 மிளகு - சீரகம் - தேவையான அளவு

செய்முறை:

கம்பில் உள்ள கற்களை நீக்கி, எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்துவிட்டு, ஈரத்துணியில் கட்டி 8 மணி நேரம் தொங்கவிட வேண்டும். இப்போது கம்பு முளைத்து வந்திருக்கும். இதுதான் முளைக்கம்பு. இதில் ஒரே நாளில் உற்பத்தியான சத்துகள் பல இருக்கும். குறிப்பாக இதன் மாவுச்சத்தில் 30% புரதமாக சுலபமாக மாற்றம் பெறுவதால், நீரிழிவால் அவதிப்படுவோருக்கு ஏற்ற உணவு. முளைத்த கம்புடன் அரை லிட்டர் நீர் சேர்த்து அரைத்து வடிகட்டினால், முளைகம்புப்பால் தயார்.
இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும். விருப்பம் உள்ளவர்கள் முந்திரிப்பாலும் சேர்க்கலாம். இனிப்புச் சுவை வேண்டாதவர்கள், அப்படியே குடிக்கலாம். இனிப்பு வேண்டுபவர்கள் பேரீச்சை, உலர் திராட்சை அல்லது வெல்லம் சேர்த்தும்... கார சுவை வேண்டுபவர்கள் மிளகு - சீரகத்தைப் பொடித்து சேர்த்தும் சாப்பிடலாம். அதுதான் முளைக்கம்பு கீர். இது தாய்ப்பால் சுரப்புக்கு மிகச் சிறந்த உணவு.
இதே வழிமுறையில் ராகிமுளைப்பால், முளைக்கோதுமைப்பால், முளைக்கறுப்புஎள்ளுப் பால், முளைகொள்ளுப் பால், முளைச்சோள பால் மற்றும் கீர் வகைகளை, தினமும் மாட்டுப்பாலுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
 குறிப்பாக, உடல் இளைத்தவர்களுக்கு எள்ளுப்பால், எள்ளுப்பால் கீர் அடிக்கடி தரலாம். உடல்பருமன், ஒபிசிட்டி, மூட்டு வலியால் அவதியுறுவோர் முளைக்கொள்ளுப்பால், கீர் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். நவதானியங்களை இதுபோல் முளைப்பால், கீராகச் செய்து தினம் ஒன்றாகச் சாப்பிடலாம்.



பருத்திவிதைப் பால்



தேவையானவை:

பருத்தி விதை  - 200 கிராம்
 வெல்லப்பாகு - 300 கிராம்
 தேங்காய்ப்பால், எள்ளுப்பால், வேர்க்கடலைப்பால்
 வெள்ளரிவிதைப்பால் (எல்லாம்சேர்த்து) - ஒன்றரை கப் (நான்கு வகை பாலும் இல்லாதபட்சத்தில், இதில் ஒன்றிரண்டு சேர்த்தும் செய்யலாம்)
 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
 தேங்காய்த் துருவல் - அரைமூடி.

செய்முறை:

பருத்திக் கொட்டையை எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து வடித்துப் பால் எடுத்துக்கொள்ளவும். இதை மிதமான தீயில் சூடாக்கி, தேவையான வெல்லப்பாகு விட்டுக் கலக்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், எள்ளுப்பால், வேர்க்கடலைப் பால், வெள்ளரிவிதைப் பால், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் கலந்து இறக்கிப் பரிமாறவும். லேசாக சூடு செய்தால் போதுமானது.
கூடுதல் சுவை வேண்டுபவர்கள் இத்துடன் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, அத்திப்பழ துண்டுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்புக்குத் துணைபுரியும் இந்தப் பருத்திவிதைப்பாலுடன், தாய்ப்பாலூட்டும் பெண்கள் முளைத்த உளுந்து விதைப் பால் எடுத்துச் சேர்த்தும் சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்கும் மாட்டுப்பாலுக்குப் பதில் இதைத் தரலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ இயற்கை உணவுகள் ~
« Reply #2 on: October 05, 2015, 04:45:32 PM »
பாரம்பர்ய உணவு

முளைக்கம்புக் களி/கூழ்



தேவையானவை (6 பேருக்கு):

கம்பு/ராகி - 300 கிராம்
 பெரிய அல்லது சின்ன வெங்காயம் - சின்ன வெங்காயம் - 2 (அ) பெரிய வெங்காயம் - 1
 உப்புக்குப் பதிலாக - தேங்காய், மாங்காய், நெல்லித்துண்டுகள், இஞ்சித்துண்டுகள் சிறிதளவு

செய்முறை:

கம்பை எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, துணியில் கட்டி எட்டு மணி நேரம் காற்றில் உலரவிட்டால், மறுநாள் முளைத்திருக்கும். இதை உரலில் இடித்து மாவாகவும், குருணையாகவும் தனித்தனியே எடுத்துக்கொள்ளவும் (முளைக்கட்டாமல் செய்ய வேண்டுமானால் இரண்டு மணி நேரம் ஊறிய கம்பு அல்லது கேழ்வரகு அல்லது விருப்பத்துக்கேற்ப பிற தானியங்களையும் இடித்துச் சலித்து, குருணை மற்றும் மாவாக தனித்தனியே எடுத்துக்கொள்ளவும்).
ஒரு மண்பானையில் 600 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்கவிடவும். அதில் முதலில் குருணையைப் போட்டு பாதி வெந்த பின்பு மாவைப் போட்டுக் கிளறவும். தீ மிதமாகவே இருக்கட்டும். அடிப்பிடிக்கக் கூடாது. தண்ணீர் கூடுதலாகத் தேவையெனில் சேர்க்கலாம். வெந்து நன்றாகக் கெட்டியாகி களியாக வரும் சமயம், கைப்படாமல் துணியைக் கட்டி மூடிவிடவும். சிறிது ஆறியதும், கரண்டியால் எடுத்து தட்டுகளில் போட்டு சாப்பிடலாம். களி ஒட்டாமல் பார்க்க பந்து போல், சுவைக்கவும் நன்றாக இருக்கும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், நெல்லித்துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம்.
இந்தக் களியை ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். பசி அடக்கும், தெம்பு ஏற்றும் உணவு. மறுநாள் ஒரு டம்ளர் நீரில் மோர் கலந்து, 50 கிராம் களியை எடுத்து அதில் கரைத்து... தேங்காய், மாங்காய், நெல்லித்துண்டுகள், இஞ்சித்துண்டுகள் சேர்த்து கூழாகவும் சாப்பிடலாம்.

வத்தல் மற்றும் தக்காளி அல்லது குடமிளகாய், புடலைக்கூட்டு, புளிக்குழம்பு போன்றவைகளையும் தொக்கு, கத்திரிக்காய் பொரியல் கூட்டு இணைத்து சாப்பிடலாம்.
இதேபோல் ராகி, வரகு, தினையிலும் களி, கூழ் செய்து சாப்பிடலாம். இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து, புட்டாகவும் செய்து சாப்பிடலாம். கெட்டியாக ஒட்டாமல் இருக்கும் ராகி, கம்புக்களியை குழம்பு, கூட்டுடன் இணைத்துச் சாப்பிடலாம். மேலும் இதனுடன் இனிப்பு, தேங்காய்த் துருவல் இணைத்தும் செய்யலாம்; மோரில் கரைத்து இந்துப்பு, மாங்காய்த்தொக்கு, பூண்டு, இஞ்சி ஊறுகாய்களை இணைத்தும் சாப்பிடலாம்.