Author Topic: ~ மூலிகை இல்லம்! செரிமான மண்டலத்தைக் காக்க! ~  (Read 393 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226807
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூலிகை இல்லம்! செரிமான மண்டலத்தைக் காக்க!


பெரும்பாலான நோய்கள் வருவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று உணவு. உடலுக்கு ஒவ்வாத, மோசமான உணவுகள் நம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்பவை. உணவைச் செரிமானம் செய்து, சத்துக்களைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்யும் செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கும் எளிய வழிகள் இங்கே...



வயிற்றுக்கான கட்டளைகள்

பசித்துப் புசிக்கும் பழக்கம், நம் வயிற்றைப் பாதுகாக்கும்; உடலை உறுதியாக்கும்.

காலை எழுந்தவுடன் 100 மி.லி தண்ணீர் அருந்துவது நல்லது.

உணவுக்கு முன் விளாம்பழம், உணவுக்குப் பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடலாம்.

வைட்டமின் சி நிறைந்த நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, கீரைகள் வயிற்றைப் பாதுகாக்கும்.

வயிற்றுப்புண்களை ஆற்றும் வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக்கீரை மோர்

தேவையானவை:துருவிய வெள்ளைப் பூசணி - 50 கிராம், வெந்தயக்கீரை - 50 கிராம், மோர் - 1 டம்ளர், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக் கீரையைத் தண்ணீர் விடாமல் அரைத்து, மோருடன் கலந்து, இந்துப்பு போட்டு, வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பலன்கள்: ‘வெள்ளைப் பூசணிக்காய், பாசிட்டிவ் எனர்ஜி தரக்கூடிய காய்’ என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களும் வயிற்றுப்புண்களைக் குணமாக்கும். அடிக்கடி வரும் ஏப்பம், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் சரியாகும். வயிறு தொடர்பான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். வயிற்றில் சுரக்கும் அமிலம் (HCL) தொடர்பான பிரச்னைகள் சரியாகும். செரிமானம் சீராக நடைபெறும்.
« Last Edit: September 23, 2015, 09:01:07 PM by MysteRy »