Author Topic: ~ தக்காளி - பூண்டு சட்னி ~  (Read 353 times)

Online MysteRy

தக்காளி - பூண்டு சட்னி



தேவையான பொருட்கள் :

பூண்டு - கால் கப்
மிளகாய் வற்றல் - 2
பெரிய தக்காளி - 1
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை :

• பூண்டு பற்களைத் தோல் உரித்து வைக்கவும்.

• தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை போட்டு கருமாமல் வறுக்கவும். அடுத்து பூண்டை போட்டு வதக்கிய பின் தக்காளியை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

• ஆறியதும் மிக்சியில் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

• மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்.

• பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும். சட்னி வற்றி தொக்கு போல் ஆகும் போது அடுப்பை அணைக்கவும். தக்காளி, பூண்டின் பச்சை வாடை சுத்தமாகப் போய் மணமாக இருக்கும்.

• சுவையான தக்காளி - பூண்டு சட்னி சட்னி ரெடி.

• இட்லி தோசையுடன் பரிமாறவும். காரசாரமாக இருக்கும். இந்த சட்னியை சாப்பிடும் போது சிறிது நல்லெண்ணையை சூடாக்கி சட்னியில் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.