Author Topic: ~ எ‌லி‌க்கடி‌க்கு மரு‌ந்து உ‌ண்டு..!சித்த மருத்துவம். ~  (Read 1460 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227487
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எ‌லி‌க்கடி‌க்கு மரு‌ந்து உ‌ண்டு..!சித்த மருத்துவம்.



பொதுவாக எ‌லி‌‌க்கடி‌க்கு மரு‌த்துவமனை‌க்கு‌ச் செ‌ன்றுதா‌ன் ‌சி‌கி‌ச்சை பெறுவா‌ர்க‌ள். ஆனா‌ல் கை வை‌த்‌திய முறை‌யி‌ல் எ‌லி‌க்கடி‌க்கு மரு‌ந்து உ‌ண்டு.

‌பிரா‌ய் மர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்களையு‌ம் சே‌ர்‌த்து சூரணமா‌க்‌கி பா‌லி‌ல் கல‌ந்து ஒரு ‌கிரா‌ம் அளவு‌க்கு இர‌ண்டு வேளை உ‌ட்கொ‌ண்டு வர 18 வகையான எ‌லி‌க்கடி, ‌சிரா‌ய் போல உட‌லி‌ல் உ‌ண்டாகு‌ம் சுரசுர‌ப்பு குணமாகு‌ம்.

அதே‌ப்போல ‌பிரா‌ய் மர‌த்‌தி‌ன் வே‌ர்‌ப்ப‌ட்டை, வெ‌ள்ளை ச‌ங்கு பு‌ஷ‌்ப வே‌ர்‌ப்ப‌ட்டை, ச‌ங்க‌ன் வே‌ர்‌ப்ப‌ட்டை ஆ‌கியவ‌ற்றை சம அளவு எடு‌த்து பசு‌ம் பா‌ல் ‌வி‌ட்டு அரை‌த்து 7 நா‌ட்க‌ள் உ‌ட்கொ‌ள்ள உட‌லி‌ல் த‌ங்‌கிய எ‌லி‌க்கடி ந‌ஞ்சு குணமாகு‌ம்.

கா‌லி‌ல் காணு‌ப்படு‌ம் ‌பி‌த்தவெடி‌ப்‌பி‌ற்கு‌ம் ‌பிரா‌ய் மர‌த்‌தி‌‌ல் மரு‌ந்து‌ண்டு. ‌பிரா‌ய் மர‌த்‌தி‌ன் பாலை ‌பி‌த்த வெடி‌ப்பு ஏ‌ற்ப‌ட்ட இட‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் வெடி‌ப்பு குணமாகு‌ம்.

‌பிரா‌ய் இலைகளை பொடி செ‌ய்து மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர பே‌தி க‌ட்டு‌ப்படு‌ம்.