பெரிய சாதனைகள் புரிவதெல்லாம்
சின்னஞ்சிறு நம்பிக்கைகளே
பெரிய வெற்றிகள் கொள்வதெல்லாம்
சின்னஞ்சிறு முயற்சிகளே
பெரிய விருட்சமாய் வளர்வதெல்லாம்
சின்னஞ்சிறு விதைகளே
பெரிய வெள்ளமாய் உருமாருவதெல்லாம்
சின்னஞ்சிறு மழைத்துளிகளே
பெரிய சண்டைகளை தீர்பதெல்லாம்
சின்னஞ்சிறு சமாதனங்களே
பெரிய கவிதைகளை கொடுப்பதெல்லாம்
சின்னஞ்சிறு கிறுக்கல்களே